அண்ணன் செல்வராகவன் வழியில் தம்பி தனுஷ்.. விவாகரத்து அறிவிப்பால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிரிவதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் திருமணம் செய்து 18 ஆண்டுகள் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திய நிலையில், தற்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கான காரணங்கள் என்ன என ஏகப்பட்ட யூகங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. அண்ணன் செல்வராகவனை போலவே தம்பி தனுஷும் விவாகரத்து செய்ய போகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இனி கணவன் மனைவி இல்லை

இனி கணவன் மனைவி இல்லை

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டோலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக ஒருவர் பின் ஒருவராக சமூக வலைதளத்தில் போட்ட பதிவு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை என்பதை காலம் தாழ்த்தாமல் அறிவித்து விட்டனர்.

வதந்திகள் வருவதற்கு முன்

வதந்திகள் வருவதற்கு முன்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரியப் போகிறார்களா? என்கிற வதந்தி பரவுவதற்கு இடம் கொடுக்காமல் அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்க செயல் தான் என்றும் இது இருவரது தனிப்பட்ட விருப்பம் என்பதால் தேவையற்ற யூகங்களை தவிர்க்க வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அண்ணன் வழியில்

அண்ணன் வழியில்

அதே சமயம் இணையத்தில் தனுஷ் தான் இந்த விவாகரத்துக்கு முழு காரணம் என்றும் ஏற்கனவே அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்து விட்டு உதவி இயக்குநரான கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகர் தனுஷும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என வதந்திகள் கிளம்பி உள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில்

செல்வராகவன் இயக்கத்தில்

கடந்த 18 ஆண்டுகளாக மனைவியுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வந்த நடிகர் தனுஷ் இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் ஷேர் செய்து வந்த நிலையில், திடீரென இப்படி விவாகரத்து அறிவிப்பை அறிவித்ததற்கு பின்னணியில் அவரது அண்ணன் உள்ளாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

ஆனால், இது முழுக்க முழுக்க இருவரது தனிப்பட்ட விருப்பம். ஏன் பிரிகிறோம் என இருவருமே வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தேவையற்ற யூகங்களையும், வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மகன்கள் யாரிடம் இருப்பார்கள்

மகன்கள் யாரிடம் இருப்பார்கள்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனே இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
ரஜினிகாந்த் அப்செட்

ரஜினிகாந்த் அப்செட்

ஏற்கனவே இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தை அஸ்வின் ராம்குமார் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் அதே போன்றவொரு நிலைமை உருவாகி விட்டதே என நினைத்து நடிகர் ரஜினிகாந்த் மிகவும் அப்செட் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X