விவாகரத்திற்கு பின் நேருக்கு நேர் சந்தித்த சமந்தா – நாக சைதன்யா...அப்புறம் நடந்ததை பாருங்க

ஐதராபாத் : விவாகரத்து ஆகி சில மாதங்களே ஆன நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் என்ன பேசினார்கள், அவர்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

2021 ம் ஆண்டில் சோஷியல் மீடியாக்களிலும், மீடியாக்களிலும் அதிகம் பேசப்பட்டவர் சமந்தா. ஜுன் மாதத்தில் சோஷியல் மீடியா பக்கத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கிய உடனேயே விவாகரத்து வதந்திகள் துவங்கி விட்டனர்.

வதந்தியில் சிக்கிய சமந்தா

வதந்தியில் சிக்கிய சமந்தா

ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த சமந்தா, பிறகு மெளனம் காக்க துவங்கினார். சமந்தா மட்டுமின்றி நாக சைதன்யா மற்றும் நாகர்ஜுனா குடும்பத்தை சேர்ந்தவர்களும் இது பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இதற்கு பிறகு நாகர்ஜுனா குடும்பத்தில் நடந்த விழாக்களில் பங்கேற்பதை சமந்தா தவிர்த்ததால் விவாகரத்து வதந்தி கிட்டதட்ட உறுதியானது.

பிரிவை அறிவித்த ஜோடி

பிரிவை அறிவித்த ஜோடி

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி தாங்கள் பிரிவதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா தங்களின் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இந்த துரதிஷ்டவசமான நேரத்தில் ரசிகர்கள், மீடியாக்கள் சப்போர்ட் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ஓவர் கவர்ச்சி

ஓவர் கவர்ச்சி

விவாகரத்தை அறிவித்த பிறகும் கூட வதந்திகளிலும், கிசுகிசுக்களிலும் இப்போது வரை அதிகம் பேசப்பட்டு வருகிறார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு அதிக கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு வரும் சமந்தா, சமீபத்தில் மோனோகினியில் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

 நேருக்கு நேர் சந்திப்பு

நேருக்கு நேர் சந்திப்பு

விவாகரத்தை அறிவித்து மூன்று மாதங்களுக்கு பிறகு, தற்போது சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டுள்ளனர். நாக சைதன்யா தற்போது பங்காருராஜு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ராமாநாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

எங்கே சந்தித்தார்கள்

எங்கே சந்தித்தார்கள்

இந்த பக்கம் சமந்தாவும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் யசோதா படத்தின் ஷுட்டிங்கும் ராமாநாயுடு ஸ்டூடியோவில் தான் நடக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கிறிஸ்துமஸ் அன்று நிறைவடைந்தது. ஷுட்டிங்கில் பங்கேற்க வந்த போது தான் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

அப்புறம் என்ன நடந்தது

அப்புறம் என்ன நடந்தது

விவாகரத்திற்கு பிறகு இப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். ஆனால் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஏதும் பேசிக் கொள்ளவில்லையாம். ஷுட்டிங்கை முடித்து விட்டு அவரவர் கார்களில் ஏறி சென்று விட்டார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X