அடப்பாவமே.. அந்த சீரியல் ஹீரோயினை அடுத்து இப்போது ஹீரோவுக்கும் கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்!

By

சென்னை: பிரபல டிவி நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருடன் நடித்த ஹீரோவுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

நா பேரு மீனாட்சி

நா பேரு மீனாட்சி

தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அம்மாநில அரசு, சில வாரங்களுக்கு முன் அனுமதி அளித்ததை அடுத்து, சில சின்னத்திரை தொடர்களின் ஷூட்டிங் தொடங்கியது. ஒரு டிவி சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அதில் நடித்த போட்டு பிரபாகர் என்ற நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்தப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 'நா பேரு மீனாட்சி' என்ற சிரியலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அதில் நடிகை நவ்யா சுவாமியும் கலந்துகொண்டார். இவர் தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி தொடர்களிலும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்ட இவருக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

நவ்யா சுவாமி கூறும்போது, 'கடந்த சில நாட்களாக உடல் சோர்வு மற்றும் தலைவலி இருந்தது. மருத்துவர் கூறிய அறிவுரையின் அடிப்படையில் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். இப்போது என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை. மற்றவர்களுக்கும் என்னால் கொரோனா பரவியிருக்கும் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

ரவி கிருஷ்ணா

ரவி கிருஷ்ணா

இந்நிலையில், இந்த தொடரில் நவ்யா சுவாமிக்கு ஜோடியாக நடித்த ரவி கிருஷ்ணாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியுள்ளார். 'வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எங்கிருந்து எனக்கு இந்த பாதிப்பு வந்திருக்கும் என்பது பற்றிய கவலையில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

பாகுபாடு காட்டவேண்டாம்

பாகுபாடு காட்டவேண்டாம்

தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வைராஸ் பாதிக்கப்பட்டவர்களை களங்கப்படுத்தவோ, பாகுபாடு காட்டவோ வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து நல்ல மனநிலையில் என்னை இருக்க விடுங்கள்' என்று கூறியுள்ளார். ஒரே தொடரில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X