ஷாருக்கை விட்டுவிட்டு அவரின் பரம எதிரியுடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஷாருக்கானை விட்டுவிட்டு அவரது பரம எதிரியான சல்மான் கானிடம் சென்றுவிட்டார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் காதல் விவகாரங்கள் அடிக்கடி பத்திரிக்கைகளில் வருவதுண்டு.

ஷாஹித் கபூருடன் காதல், லடாய்
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்ந்து கொள்வார்கள், பின் தகராறு செய்து பிரிந்தும் விடுவார்கள். அவர்களின் காதல் என்ன காதலோ என்று தெரியவில்லை.

ஷாஹித்திடம் இருந்து ஷாருக்கிடம் தாவிய பிரியங்கா
ஷாருக் கான் திருமணமானவர், 2 குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்துமே அவருடன் சுற்றினார் பிரியங்கா. இதனால் ஷாருக்கிற்கும், அவரது மனைவி கௌரிக்கும் இடையே பெரிய பிரச்சனை வெடித்தது.

பிரியங்காவைவிட்டு ஒதுங்கிய நடிகர்களின் மனைவிகள்
ஷாருக்-பிரியங்கா விவகாரம் அறிந்த பாலிவுட் நடிகர்களின் மனைவிகள் பிரியங்காவைப் பார்த்தாலே இரண்டு அடி தள்ளிச் சென்றனர்.

ஷாருக்கின் பரம எதிரியோடு பிரியங்கா
பிரியங்கா தற்போது ஷாருக்கானின் பரம எதிரியான சல்மான் கானோடு நெருங்கிப் பழகுகிறார். பல சமயங்களில் இருவரும் ஒன்றாகத் திரிவதைப் பலர் பார்த்துள்ளனர்.

ஷாருக்குடன் சல்மானின் முன்னாள் காதலி
சல்மானின் முன்னாள் காதலி கத்ரீனா தற்போது ஷாருக்கானுடன் நெருக்கமாகிவிட்டார். அவருடன் சேர்ந்த பிறகு கத்ரீனா சல்மானை அண்ணன் என்று அழைத்துள்ளார் என்றார் பாருங்களேன்.


Click it and Unblock the Notifications











