Atlee :அடுத்தப்படத்தில் வருண் தவானை இயக்கும் அட்லீ.. அப்ப விஜய் படம் இல்லையா?
சென்னை : நடிகர் விஜய்யின் 67வது படம் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அவரது 68வது படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தளபதி 68 ஹேஷ்டேக் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
விஜய்யின் 68வது படத்தை அட்லீ, கோபிசந்த், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் ஹீரோ வருண் தவானுடன் இணையும் அட்லி : நடிகர் விஜய்யின் 67வது படமான லியோவை தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் போன்றவர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மாஸ் பாடல் காட்சி தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வரும் 20ம் தேதி அந்தப் பாடல் காட்சியின் ரிகர்சல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 68 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அவரது 68வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இயக்குநர் கோபிசந்த் இயக்கவுள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா போன்றவர்களும் அந்த லிஸ்டில் சொல்லப்பட்டனர். இதனிடையே தற்போதைய தகவலின்படி இயக்குந்ர் வெங்கட்பிரபு விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தின் சிஜி வேலைகள்தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி தன்னுடைய அடுத்தப்படத்தில் பாலிவுட்டின் இளம் நாயகன் வருண் தவானுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியுள்ளதால் தற்போது அட்லிக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய டிமாண்ட் காணப்படுகிறது. இதனால் அவர் தற்போது வருண் தவானுடன் இணைந்துள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு பாலிவுட்டில் காணப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் அட்லி விஜய்யுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், பாலிவுட்டிலேயே தனது அடுத்தப்படத்தை இயக்கவுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விரைவில் அவர் தமிழில் படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











