twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்...ஜெயலட்சுமி பதில் புகார்

    |

    சென்னை : தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

    Recommended Video

    Snehan | இவ்வளவு பெரிய Controversy ஆகும்னு தெரியாது | Viruman Press Meet *Kollywood

    இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    சினேகன் அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணைய தளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர்.

    ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்..சினேகன் மீது பாய்ந்த நடிகை ஜெயலட்சுமி.. பூதாகரமாகும் பிரச்சனை!ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்..சினேகன் மீது பாய்ந்த நடிகை ஜெயலட்சுமி.. பூதாகரமாகும் பிரச்சனை!

    பதிலே இல்லை

    பதிலே இல்லை

    மேலும், அதற்கடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை.

    ஜெயலட்சுமி மீது சிநேகன் புகார்

    ஜெயலட்சுமி மீது சிநேகன் புகார்

    அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது ஜெயலட்சுமி தன்னை பொதுவெளியில் சந்திக்க வேண்டும் என கூறியதாகவும், ஒரு காப்பி சாப்பிடலாம் வாங்க என அழைப்பதாகவும் சினேகன் ஜெயலட்சுமி மீது புகார் கூறியிருந்தார். மேலும், எனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    7 நாளில் விளக்கம் அளிக்கனும்

    7 நாளில் விளக்கம் அளிக்கனும்

    இந்நிலையில்,தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெயலட்சுமி, கவிஞர் சினேகனின் என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அப்படி தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சினேகன் கூறும் குற்றச்சாட்டை போல் அவர் தரப்பிலிருந்து எனக்கு எந்த விதமான தொலைபேசி அழைப்போ கடிதமோ வழக்கறிஞர் மூலமாக மனுவோ என எதுவும் வரவில்லை என்றார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதால் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது.

     சிநேகன் மீது பதில் புகார்

    சிநேகன் மீது பதில் புகார்

    ஜெயலட்சுமி மீது சினேகன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், இன்று சினேகன் மீது ஜெயலட்சுமியும் பதிலுக்கு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பாடலாசிரியர் சிநேகன் என்பவர் தன்னுடைய அற்க்கட்டளை பெயரில் நான் பண மோசடி செய்திருப்பதாகவும், என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பலரை மயக்கி நான் எனது கணக்குக்கு சிநேகன் அவர்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் நான் எனது சிநேகம் அறக்கட்டளை மூலமாக 2018 ம் ஆண்டு பதிவு செய்தது முதல் பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும் எனது சிநேகம் அறக்கட்டளை சார்பில் பான் கார்டு மற்றும்ண முறையான கரன்ட் அக்கவுண்ட் வைத்துள்ளேன்.

    நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்

    நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்

    இந்நிலையில் இணையதளம் ஆரம்பிக்க சென்ற பொழுது அதே பெயரில் எனது சிநேகம் அறக்கட்டளை இணையதளம் உள்ளதை பார்த்து சிநேகன் உடனே இப்படி அடிப்படை ஆதாரமற்ற புகாரை என் மீது கொடுத்துள்ளார். மேலும் எளிதில் அனுகக் கூடிய என்னிடம் இதை பற்றி தெரிவிக்காமல், தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், சிநேகன் மேலாளர் என்னிடம் பேசியதாகவும் நான் காஃபி ஷாப் வாருங்கள் பேசலாம் என்று கூறியது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். மேலும் 2018 ம் ஆண்டு முதல் பல்வேறு நல திட்டங்களையும், பொது காரியத்திற்கும் எனது சொந்த பணத்தை செலவு செய்து தான் நான் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளோம், சிநேகன் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் இது எந்தவித குற்ற வழக்குகளும் இல்லாத என்னை பற்றி கேவலமாகவும், அவதூறு பரப்புகின்ற வகையில் பேசியது நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

    சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்

    சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்

    மேலும் சிநேகன் அவர்கள் சிநேகம் பவுண்டேஷன் என்கிற பெயருக்கு ஏதேனும் காப்பி ரைட் வாங்கி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. மேலும் தனக்கு வர வேண்டிய பணம் எனது அறக்கட்டளைக்கு அனுப்பிவிட்டதாக யாரோ புகார் செய்வதாக கூறியுள்ள சிநேகன் அந்த பணம் யாருடையது என்பைதயும் எவ்வளவு பணம் என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளார்.மேலும் வேண்டுமென்றே அடிப்படை ஆதாரமில்லாமல் பொய்யான ஒரு புகாரை அளித்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது வெளியில் அவமரியாதையாகவும், அவதூறாகவும், மிரட்டும் தோணியில் பேசியிருக்கின்ற சிநேகன் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதிகிடைக்க செய்திடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    After Snehan, now tv actress Jayalakshmi filed police complaint against Snehan. She requested to take action against Snehan. She said that Snehan spreads false statements against her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X