அடப்பாவமே.. இன்னொரு பிரபல இயக்குனருக்கும் கொரோனா.. வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை!

By

சென்னை: இயக்குநர் ராஜமவுலியை அடுத்து மற்றொரு இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருந்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா ராய் வீட்டுக்குத் திரும்பினார். பிறகு அமிதாப்பச்சனும் திரும்பினார். அபிஷேக் பச்சனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டார்.

இயக்குனர் தேஜா

இயக்குனர் தேஜா

இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் வெப் சீரிஸ் ஒன்றை இப்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் வேறு யாருக்கும் பாதிப்பில்லை.

தெலுங்கில் ஜெயம்

தெலுங்கில் ஜெயம்

இயக்குனர் தேஜா, ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். தெலுங்கில் ஜெயம், சித்திரம், நுவ்வு நேனு, நிஜம், ஒக்க வி சித்திரம், நேனு ராஜு நேனு மந்திரி உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன. பல இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார், இயக்குனர் தேஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X