களத்தில் இறங்கிய அஜித் பேன்ஸ்.. 2 நாளில் எல்லா பேனர்களும் காலி.. கட் அவுட்களை அகற்றி அசத்தல்!

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் அஜித்தின் பேனர்களை அகற்றி சுத்தம் செய்து இருக்கிறார்கள்.

சென்னை: நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் அஜித்தின் பேனர்களை அகற்றி சுத்தம் செய்து இருக்கிறார்கள்.

சென்னையில் சுபஸ்ரீ பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.கட் அவுட் முகத்தில் விழுந்ததால் தடுமாறிய சுபஸ்ரீ, லாரி மீது மோதி பலியானார்.

என்ன செய்தனர்

என்ன செய்தனர்

இதையடுத்து சினிமா நடிகர்கள் பலர் தங்களுக்கு இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று கூறினார்கள். நடிகர் சூர்யா, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் இனிமேல் தங்கள் படங்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று கூறினார்கள். நடிகர் அஜித் தரப்பில் இருந்து இது தொடர்பாக ரசிகர்களுக்கு கட்டளை பறந்தது.

பொதுவாக எப்படி

பொதுவாக எப்படி

பொதுவாக நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் ரசிகர்கள் இடையே பேனர் வைப்பதில் பெரிய போட்டி நிலவும். ஆம், யார் பெரிய பேனர் வைப்பது. யார் வித்தியாசமான பேனர் வைப்பது. யார் நீளமாக பேனர் வைப்பது. அதிக அளவில் யார் பேனர் வைக்க இடம் பிடிப்பது என்று நிறைய போட்டி நடக்கும்,

சண்டை நடக்கும்

சண்டை நடக்கும்

இந்த பேனர் வைக்கும் பிரச்சனையில் நிறைய முறை சண்டை கூட ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நிறைய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில்தான் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் எல்லோரும் மொத்தமாக இனி பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அஜித் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு கண்டிப்பான உத்தரவு சென்றுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

நீக்கினார்கள்

நீக்கினார்கள்

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அஜித் ரசிகர்கள் நீக்கி வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி என்று பல பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் மொத்தமாக அஜித் பேனர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது.

நல்லது

நல்லது

அஜித் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது. அட அவரின் நடிகர் சொன்னது போலவே வேகமாக பேனர்களை நீக்கி வருகிறார்களே செம என்று டிவிட் செய்து புகழ்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X