Maharaja: சீனாவில் பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதியின் மகாராஜா.. அடுத்ததாக படக்குழு அதிரடி பிளான்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவரது நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்தது.

மகாராஜா படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக சீனாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் தற்போது சீன ரசிகர்களையும் கொண்டாட செய்து வருகிறது. இரு தினங்களிலேயே இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த அதிரடி திட்டங்களை படக்குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.

vijay sethupathi maharaja movie china

மகாராஜா படம்: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது மகாராஜா. வித்தியாசமான கதைகளத்தில் இந்த படத்தை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் அணுகியிருந்தார். படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தன. அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் திரில்லர் ஜானரில் உருவான நிலையில் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

vijay sethupathi maharaja movie china

சீன ரசிகர்களை கவர்ந்த மகாராஜா படம்: இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமில்லாமல் சீனாவிலும் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் சீனாவில் கடந்த இரு தினங்களில் 25 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் உற்சாகம் அடைந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து அடுத்ததாக ஜப்பானிலும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு சிறப்பான படைப்பிற்கு மொழி எந்த வகையிலும் தடையாக இருக்காது என்பதற்கு மகாராஜா படம் தற்போது எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

vijay sethupathi maharaja movie china

குவியும் வசூல்: கொரோனா காலத்திற்கு பிறகு மற்ற எந்த இந்திய மொழிப் படங்களும் சீனாவில் இந்த அளவிற்கு வரவேற்பை பெறாத நிலையில் கடந்த இரு தினங்களில் மட்டுமே 4.2 லட்சம் டிக்கெட்டுகள் சீனாவில விற்பனை ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு சீன ரசிகர்களிடையே மிகச் சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனிடையே இன்றும் விடுமுறை தினமாக உள்ளதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வாரயிறுதி கலெக்ஷனாக படம் 30 கோடி ரூபாய்களை தாண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஜா டீம் அடுத்த பிளான்: சீனாவில் ரிலீசாகியுள்ள முதல் இந்திய படம் என்ற பெருமையையும் மகாராஜா படம் பெற்றுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழ் படங்களுக்கு குறிப்பாக ரஜினிகாந்தின் படங்களுக்கு ஜப்பானில் அதிகமான ரசிகர்கள் இருப்பதால் அங்கு மகாராஜா படத்தை கொண்டு செல்லவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படம் அந்நாட்டு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X