ரஜினியை வைத்து தலைவர் 173 படம்.. சிலருக்கு பதற்றம்.. சத்தியமா சொல்றேன்.. சிபி சக்கரவர்த்தி கொடுத்த உறுதி

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியதை தொடர்ந்து அப்படத்தை இயக்குவதற்கு சிபி சக்கரவர்த்தி ஃபிக்ஸ் ஆகியிருக்கிறார். இவர் ஏற்கனவே இயக்கிய டான் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைவர் 173 திரைப்படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 173ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். முதலில் அப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். அதற்கான அறிவிப்பும் வந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து; புதிய இயக்குநரை தேடும் படலம் மும்முரமாக நடந்தது. சீனியர் இயக்குநர்களிடம் செல்லாமல் இளம் இயக்குநரையே கமிட் செய்ய ரஜினியும், கமலும் முடிவு செய்தார்கள்.

சிபி சக்கரவர்த்தி என்ட்ரி: கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார், வெங்கட் பிரபு என பலரின் பெயர்கள் அடிபட்டன. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கி 100 கோடி ரூபாய் வசூலித்த சிபி சக்கரவர்த்தி இயக்குநராக கமிட் செய்யப்பட்டார். இதுவரை ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் அவர் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதை பார்த்து திரைத்துறையில் பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

After Sundar C Exit Don Director Cibi Chakaravarthi to Helm Rajinikanth s Thalaivar 173
Photo Credit:

எப்போது சொன்ன கதை?: டான் படம் வெளியாகி வெற்றி பெற்றபோது ரஜினியை நேரில் சந்தித்திருதார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி; ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கமிட்மென்ட்டுகளை உடனடியாக முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால் அப்போது நடக்காமல் போய்விட்டதாக கூறப்பட்டது.

அந்தக் கதையா?: தற்போது அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்து ரஜினியிடம் சிபி ஓகே வாங்கிவிட்டதாக தெரிகிறது. கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடப்படும் படமாகத்தான் இது இருக்கும் என கோலிவுட்டிலிருந்து தகவல்கள் வருகின்றன. அதேசமயம் டான் படமே ஃப்ளூக்கில் ஓடிய படம்; அப்படி இருக்கையில் எதை நம்பி சிபி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார்; இப்படத்தை சொதப்புவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒருதரப்பினர் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

சிபி சக்கரவர்த்தி கொடுத்த உறுதி: இந்நிலையில் வித் லவ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கலந்துகொண்ட சிபி சக்கரவர்த்தி பேசுகையில், "தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வந்த பிறகு இப்போதுதான் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த அறிவிப்பு வந்ததும் எதிர்பார்க்காத பலரிடமிருந்து எனக்கு பாராட்டு வந்தது. அதேபோல் ஒரு சிலரோ இவன் ரஜினியை வைத்து படம் செய்கிறானா என்று பதற்றப்படுகிறார்கள். எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லோருக்குமே திருப்தியாக இருக்கும். இது சத்தியம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X