twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன்னி லியோனை தொடர்ந்து சின்சானுக்கு காலேஜ் சீட்.. இதுல இருந்து ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது!

    |

    மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கு கல்லூரி சேர்க்கையில் இடம் கொடுத்த பட்டியல் வைரலான நிலையில், தற்போது கார்ட்டூன் கதாபாத்திரம் சின்சானுக்கு இன்னொரு கல்லூரி இடம் கொடுத்திருப்பது கேளிக்கூத்தாக மாறியுள்ளது.

    Recommended Video

    SHINCHANக்கு என் குரல் தான் | DUBBING ARTIST DGAN CHAT | FILMIBEAT TAMIL

    மேற்கு வங்க கல்லூரிகளில் தான் இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதனால், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் எப்போது? குடும்பம் தகவல்!பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் எப்போது? குடும்பம் தகவல்!

    சன்னிலியோன் முதலிடம்

    சன்னிலியோன் முதலிடம்

    பிளஸ் 2வில் 4 பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவி என்ற கெத்தான அறிவிப்போடு, நடிகை சன்னி லியோனுக்கு கொல்கத்தாவை சேர்ந்த அசுடோஷ் கல்லூரியில் பிஏ ஹானர்ஸ் படிப்பில் சேர முதலிடம் அளித்த சேர்க்கைப் பட்டியல் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி வைரலானது.

    கல்லூரியில் சந்திக்கிறேன்

    கல்லூரியில் சந்திக்கிறேன்

    நாடு முழுவதும் இந்த செய்தி வைரலான நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் ஹாலிடேவை கொண்டாடி வரும் சன்னி லியோன், அடுத்த ஆண்டு கல்லூரியில் உங்களை சந்திக்கிறேன் என குறும்புத்தனமாக போட்ட ட்வீட்டும் நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த லாக்டவுனில் காமெடி படங்கள் வெளியாகாத குறையையும் தீர்த்து வைத்தது.

    சின்சானுக்கு சீட்

    சின்சானுக்கு சீட்

    இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான சிலிகுரி கல்லூரியில் பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டப் படிப்பில் சேர ஜப்பானை சேர்ந்த பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான சின்சானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை பட்டியலில் இப்படி தொடர்ந்து தவறுகள் நடந்து வருவதை பார்த்து கல்வியாளர்கள் பலரும் அப்செட் ஆகி உள்ளனர்.

    பாடகி பெயரும்

    பாடகி பெயரும்

    மேலும், பிரபல பாடகி நேகா கக்கரின் பெயர் மணிக்சக் கல்லூரியின் பி.ஏ. ஆங்கிலம் ஹானர்ஸ் சேர்க்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சன்னி லியோனின் பெயர் மேலும் மூன்று கல்லூரிகளின் சேர்க்கை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டே விஷமிகள் இந்த வேலையை செய்கின்றனர் என கல்லூரி நிர்வாகம் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.

    ஆசிரியர்கள் என்ன செய்றாங்க

    ஆசிரியர்கள் என்ன செய்றாங்க

    மாணவர்களின் சேர்க்கைப் பட்டியலில் இப்படி தொடர்ந்து தவறுகள் நடந்து வருவது கல்லூரியின் நிர்வாகத்தின் மீதும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீதும் சந்தேகத்தை கிளப்பும் விதமாக அமைந்துள்ளது. முதலிடத்தில் ஒரு மாணவரின் பெயர் அச்சிடப்பட்டு, அது மாணவர்கள் பார்வைக்காக பொதுவெளியில் ஒட்டப்படுவது வரை ஏன் எந்த ஆசிரியரும் அதனை க்ராஸ் செக் செய்யவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது.

    English summary
    Cartoon character Shinchan’s name also placed in West Bengal college merit list. Before Sunny Leone name tops in the College admission list screen shot goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X