சூர்யாவை தொடர்ந்து முருகனாக மாறிய விஜய் ஆண்டனி.. வள்ளி மயில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்!

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் வள்ளி மயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, சத்யராஜ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகி வருகிறது வள்ளி மயில்.

80களில் நடக்கும் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து வரும் விஜய் ஆண்டனி முருகனாக மேடையில் நடித்துள்ள காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. பல படங்கள் ஷூட்டிங்கே முடிந்த நிலையில், இன்னமும் வெளியாகாமல் உள்ளன. பிச்சைக்காரன் 2, வள்ளி மயில் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் நிலையில், வள்ளி மயில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில்

சுசீந்திரன் இயக்கத்தில்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, ஈஸ்வரன், வீர பாண்டியபுரம், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில், தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து வள்ளி மயில் படத்தை உருவாக்கி வருகிறார்.

முருகனாக விஜய் ஆண்டனி

முருகனாக விஜய் ஆண்டனி

1980களில் நடக்கும் கதையாக வள்ளி மயில் உருவாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மேடையில் முருகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

முருகர் வேஷம் போட்ட சூர்யா

முருகர் வேஷம் போட்ட சூர்யா

இந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா உள்ளம் உருகுதய்யா பாடலில் முருகராக வேஷம் போட்டு நடித்திருந்தார். இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் முருக கடவுளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடகமாக உருவாகி உள்ள இந்த படத்தின் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.

ஜதி ரத்னலு ஹீரோயின்

ஜதி ரத்னலு ஹீரோயின்

ஜதி ரத்னலு படத்தில் ஹீரோயினாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த அனடு மே மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு அதற்குள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சிம்புவின் ஈஸ்வரன் படத்தை வேற லெவல் ஸ்பீடில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த படத்தையும் விரிவாக முடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X