twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? சிபிஐ விசாரணை கேட்கும் நெட்டிசன்கள்

    |

    மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சிபிஐ விசாரிக்கும் நிலையில், மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் தொடர்ந்து கிளப்பி வருகின்றனர்.

    அதே போல கடந்த 2018ம் ஆண்டு துபாயில் பாத் டப்பில் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீதேவி மரணத்திலும் மர்மம் நீடிப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    காதலித்த காலத்தில் அஜித் ஷாலினி பயன்படுத்திய கோடுவோர்டு.. பிரபல நடிகர் சொன்ன சுவாரசிய தகவல்! காதலித்த காலத்தில் அஜித் ஷாலினி பயன்படுத்திய கோடுவோர்டு.. பிரபல நடிகர் சொன்ன சுவாரசிய தகவல்!

    தூக்கில் தொங்கியதை யாரும் பார்க்கல

    தூக்கில் தொங்கியதை யாரும் பார்க்கல

    உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு விசாரணையின் போது ஆஜரான கே.கே. சிங் தனது மகன் தூக்கில் தொங்கியதை யாரும் பார்க்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தற்போது தெரிவித்துள்ளார். முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கால்களில் ரத்தம் வந்ததாக ஆம்புலன்ஸ் டிரைவரும் வாக்குமூலம் கொடுத்திருந்தது இது தற்கொலை அல்ல கொலை தான் என்ற சந்தேகத்தை உறுதி படுத்தும் விதமாக உள்ளது.

    மகாராஷ்ட்ரா அரசு

    மகாராஷ்ட்ரா அரசு

    கடந்த ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை செய்து வந்தனர். பின்னர் பீகார் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், மகாராஷ்ட்ரா அரசு பீகார் போலீசார் விசாரிக்கவும், சிபிஐ விசாரிக்கவும் தடையாக இருந்து வந்தது.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்
    சிபிஐ விசாரிக்க உத்தரவு

    சிபிஐ விசாரிக்க உத்தரவு

    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பீகார் அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க என்ன தடை என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. மத்திய அரசு சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும், உத்தரவு பிறப்பிக்கிறோம் என்றும் உறுதியளித்ததை அடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மர்மம் நீடிக்கிறது

    மர்மம் நீடிக்கிறது

    தொடர் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது நெட்டிசன்கள், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி துபாய் ஓட்டலில் உள்ள பாத் டப்பில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திலும் மர்மம் நீடிப்பதாகவும் அது குறித்தும் சிபிஐ விசாரணை தேவை என நெட்டிசன்கள் தற்போது மீண்டும் கிளறி வருகின்றனர்.

    240 கோடி இன்சுரன்ஸ்

    240 கோடி இன்சுரன்ஸ்

    ஓமன் நாட்டில் நடிகை ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி இன்சுரன்ஸ் போடப்பட்டிருப்பதாகவும், அவர் துபாயில் இறந்தால் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதற்காக துபாய் ஓட்டலில் அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளனர் என்று நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர். மேலும், என்னதான் மது போதையில் இருந்தாலும், ஒருவர் எப்படி இரண்டு அடி தொட்டியில் தானே மூழ்கி சாக முடியும் என்றும், மகாராஷ்ட்ரா அரசு அரசு மரியாதை செய்யும் போதே இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என தெரியும் என்றும் பல்வேறு கமெண்ட்டுகள் #CBIEnquiryForSridevi ஹாஷ்டேக்கில் குவிந்து வருகின்றன.

    English summary
    After netizens long time wish Cbi for Sushant singh Rajput case arrived, now netizens demand CBI investigation for late actress Sridevi demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X