படப்பிடிப்பில் பிகினியால் நடிகைக்கு ஏற்பட்ட பிரச்சனை: நள்ளிரவில் தேம்பித் தேம்பி அழுகை
மும்பை: தனுஸ்ரீ போன்று தனக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாக நடிகை சப்னா பாபி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள தனுஸ்ரீ தத்தாவுக்கு இந்தி நடிகை சப்னா பாபி ஆதரவு தெரிவித்துள்ளார். அனில் கபூர் நடித்த தொலைக்காட்சி தொடரான 24-ல் கிரண் ரத்தோடாக நடித்து பிரபலமானவர் சப்னா.
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

டான்ஸ்
படப்பிடிப்பு தளத்தில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து மற்றொரு பெண்ணிடம் சென்றால் அவர் ஆணுடன் சேர்ந்து கொண்டு என் பின்னால் சிரித்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பாடலுக்கு நான் டான்ஸ் ஆடியபோது நடந்த சம்பவம் எனக்கு இன்னும் அப்படியே நினைவில் உள்ளது. டிரையலின்போது நான் என் உடை அலங்கார நிபுணரிடம் சென்று அன்டர்வயர் உள்ள பிகினியில் 7 மணிநேரத்திற்கும் மேலாக ஆடினால் நெஞ்சு வலிக்கும் என்றேன்.

பிகினி
அந்த ஆடை அலங்கார நிபுணர் ஒரு பெண் என்பதால் என் பிரச்சனை புரியும் என்று நம்பி அவரிடம் கூறினேன். அன்டர் வயரை மட்டும் நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவரோ நான் கூறியதை இயக்குனரிடம் தெரிவித்து கிண்டல் செய்து சிரித்தார். அன்டர் வயருடன் தான் பிகினி அணிய வேண்டும் என்று ஆண் இயக்குனர் வலியுறுத்தியதால் அப்படியே அணிய வேண்டியதாகிவிட்டது.

கண்ணீர்
இயக்குனர் வலியுறுத்தியும் முடியாது என்று கூறினால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்களோ இல்லை தயாரிப்பு நிறுவனம் நம் பெயரை பிளாக்லிஸ்ட் செய்துவிடுமோ என்ற பயத்தில் அந்த பிகினியை அணிந்து நடித்தேன். அன்று இரவு நெஞ்சு வலி தாங்க முடியாமல் தூக்கத்தின் பாதியில் விழித்தேன். இரவு எப்படி அழுதேன் என்பதை எப்பொழுதும் மறக்கவே மாட்டேன்.

ஆதரவு
நான் தனுஸ்ரீ தத்தாவை நம்புகிறேன். நாம் சிலவற்றை கண்டுகொள்ள மறுப்பதாக நினைக்கிறேன். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த போது பெண்களாகிய நாம் எங்கிருந்தோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சப்னா. தனுஸ்ரீயை பார்த்து தான் சப்னா உள்ளிட்ட பிற நடிகைகளுக்கு தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து பேச துணிச்சல் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











