twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா தொற்று உறுதி...அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி

    |

    மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று காலை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக அக்ஷய் குமார், தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிகிச்சை பெறுவதற்காக அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு போவாய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இதையும் சமூக வலைதளத்தில் அக்ஷய் பகிர்ந்துள்ளார். அதில், "அனைவரின் அன்பான வாழ்த்துக்கள், பிராரத்தனைகளுக்கு நன்றி. அது நிச்சயம் பலம் தரும். நான் நன்றாக இருக்கிறேன். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் திரும்பி வருவேன் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    தனிமைப்படுத்திக் கொண்ட அக்ஷய்

    தனிமைப்படுத்திக் கொண்ட அக்ஷய்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அக்ஷய் குமார், தனது புதிய படமான 'ராம் சேது' படத்தின் சூட்டிங்கை துவக்கினார். இதில் அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கிறார். கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பே அக்ஷய், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்.

    ரசிகர்கள் பிரார்த்தனை

    ரசிகர்கள் பிரார்த்தனை

    இருப்பினும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்ஷய் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள், அக்ஷய் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    ராம் சேது ஊழியர்களுக்கு பரிசோதனை

    ராம் சேது ஊழியர்களுக்கு பரிசோதனை

    அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் 'ராம் சேது' படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    After testing positive for Covid-19, Akshay Kumar informs that he has been hospitalised as a precautionary measure
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X