Don't Miss!
- News
"கூரை ஏறி முடியாதவர் வைகுண்டம் போவாராம்".. திரௌபதி முர்மு ஊரில் மின்சாரமே இல்லை.. வாசுகி விளாசல்
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Finance
முதல்நாளே இப்படியா? பாவம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 540 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தனுஷ் படத்திற்கு வேற லெவல் ஸ்கெட்ச் போடும் நெல்சன்...பீஸ்ட் கொடுத்த அடி வேலை செய்கிறதோ?
சென்னை : விரைவில் தனுஷை வைத்து டைரக்டர் நெல்சன் திலீப்குமார் புதிய படம் ஒன்றை இயக்க போவதாக கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
6
கோடி
சம்பளம்
எதுக்கு?...
நயன்தாராவை
வம்புக்கு
இழுத்த
தயாரிப்பாளர்
!
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய டைரக்டர் நெல்சன் திலீப்குமார், விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதிகமானவர்கள் நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்ததுடன், நெல்சன் திலீப்குமார் திரைக்கதையை சொதப்பி விட்டார் என கூறி உள்ளனர்.

பீஸ்ட்டால் கிளம்பிய வதந்தி
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம் ஏமாற்றத்தை தந்ததால், அடுத்து நெல்சன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரஜினியின் தலைவர் 169 பட வாய்ப்பு அவர் கையை விட்டு போய் விட்டதாக தகவல் பரவி பரபரப்பானது. இதை வைத்து பல வதந்திகள் பரவியதால், ரஜினியே தனது ட்விட்டர் கவர் போட்டோவில் தலைவர் 169 ஸ்டில்லை மாற்றியதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

பதில் சொல்வாரா நெல்சன்
தற்போது வாரத்திற்கு இரண்டு முறை ரஜினியை சந்தித்து கதை விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் நெல்சன். இந்த படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் துவங்கப்படும் என கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் கிடைத்த அடிக்கு பதில் சொல்லும் விதமாக தலைவர் 169 படத்தை பிரம்மாண்ட வெற்றி படமாக்க நெல்சன் தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.

தனுஷ் ஓகே சொல்லிட்டாரா
தலைவர் 169 படத்தை முடித்த பிறகு, ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக தனுஷிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி இருந்தாராம் நெல்சன். ஆனால் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் வரிசையாக நடித்து வருவதால் தனுஷ், நெல்சன் படம் பற்றி எந்த முடிவையும் சொல்லவில்லை என கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

எப்போ ஷுட்டிங்
தற்போது தனுஷ் நடிக்கும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்கள் வேகமாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வாத்தி படத்தின் ஷுட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை முடித்த உடன் சாணி காயிதம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் தனுஷ் நடிக்க போகிறார். இந்த படத்தை முடித்த பிறகு நெல்சன் படத்தில் தனுஷ் நடிக்க போகிறாராம்.

இதெல்லாம் முடிவாகிடுச்சா
நெல்சன், தனுஷ் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறாராம். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளதாம். தலைவர் 169 படத்தின் மூலம் மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகு தனுஷ் படத்தை இயக்க நெல்சன் முடிவு செய்திருக்கிறாராம். இதனால் இந்த டிஎன்ஏ காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.