விஜய்யை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. அப்ப கைதி 2?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகரம் எனும் தரமான படத்தை இயக்கி தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் லோகேஷின் திறமையை கண்டு வியந்து, கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது.

தீபாவளி ரேஸில் விஜய்யின் பிகிலுடன் மோதிய கார்த்தியின் கைதி, அபார வரவேற்பை வெற்றிருக்கிறது. லோகேஷின் திறமையை கண்டு திரையுலகினரும், ரசிகர்கள் வியந்துபோயிருக்கிறார்கள்.
'கைதி' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் லோகேஷ், விஜய்யின் 'தளபதி 64' படத்தை குஷியாக இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது.
'கைதி' படத்துக்கு முன்பாகவே, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க லோகேஷ் கனகராஜ், டிரீம் வாரியர்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 'இரும்பு கை மாயாவி' எனும் காமிக்ஸ் கதையை அடிப்படையாக வைத்து அந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது அப்போது நடக்கவில்லை.
இந்நிலையில் விஜய் படத்தை முடித்துவிட்டு, அடுத்து சூர்யாவை வைத்து படம் இயக்க லோகேஷ் ரெடியாகி வருகிறார். 'கைதி' படத்துக்காக ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூட, சூர்யா - லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையப் பேச்சுவார்த்தை நடந்ததை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். எனவே சூர்யா - லோகேஷ் கூட்டணி அமைவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே கைதி 2 படத்தை இயக்கவும் லோகேஷ் தயார் என அறிவித்துள்ளார். கார்த்தியும் அதனை ஆமோதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











