Vijay: இது எப்போ எடுத்தது.. உடல் மெலிந்து காணப்படும் விஜய்.. வெங்கட் பிரபுவுடன் செம பிக்!

சென்னை: அஜித்தின் மங்காத்தா எடுத்த கையோடு விஜய் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கனவு நனவாகி உள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்திலும் கனவு நனவானது என்றே தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் வெங்கட் பிரபு பதிவிட்டு இருந்தார்.

After Thalapathy 68 announcement arrives Vijay and Venkat Prabhu rare recent pic out now

இந்நிலையில், விஜய் மற்றும் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

மங்காத்தா செட்டில்: அஜித்தின் மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கி வந்த போதே அந்த படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் சென்றிருந்தார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படம் அப்போதே வெளியாக மங்காத்தா 2 படத்தில் அஜித்தையும் விஜய்யையும் வைத்து வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

ஆனால், மங்காத்தா 2 மட்டும் அல்ல வெங்கட் பிரபு உடன் எந்தவொரு சோலோ படத்திலும் விஜய் நடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகின. விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என வெங்கட் பிரபுவும் வெகு காலமாக வெயிட் பண்ணி வந்த நிலையில், இறுதியாக தற்போது தளபதி 68 படத்தை இயக்கும் சூப்பரான வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபுவுடன் விஜய்: அர்ச்சனா கல்பாத்தி, தளபதி விஜய் என வரிசையாக தளபதி 68 படக்குழுவினர் விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பையும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டனர்.

இந்நிலையில், விஜய்யும் வெங்கட் பிரபுவும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா? அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

After Thalapathy 68 announcement arrives Vijay and Venkat Prabhu rare recent pic out now

லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி 68 படமும் சரவெடியாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு சம்மருக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆரம்பமாகுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், ஜூலை முதல் வாரத்திலேயே தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X