Vikram: மாதங்கள் கடந்த தங்கலான் லுக்.. புது தோற்றத்தில் ஆளை அசத்தும் விக்ரம்!
சென்னை: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பா ரஞ்சின் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.
முன்னதாக பொன்னயின் செல்வன், தங்கலான் என அடுத்தடுத்த படங்களில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் காணப்பட்டார் விக்ரம்.

தங்கலான் சூட்டிங் நிறைவுக்கு பிறகு புதிய லுக்கில் விக்ரம்: நடிகர் விக்ரம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பிற்கு தீனி போடும் கேரக்டர்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல. அதை மிகவும் இனிப்பாக ரசிகர்களுக்கு கொடுத்துவிடுவார். அந்தவகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் ரிலீசுக்கு காத்திருக்கும் தங்கலான் படங்கள் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்துள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் விக்ரமிற்கு மிகச்சிறப்பாக அமைந்தன. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் விக்ரம்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தில் வயதானவர் மற்றும் 30 வயது இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கை கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் லுக் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது.
நீண்ட தாடி மற்றும் மீசை, தூக்கி முடியப்பட்ட கொண்டை என ஆளே வித்தியாசமாக காணப்பட்டார். முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் நீண்ட தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன்தான் இருந்தார் விக்ரம். இந்த கெட்டப் பல மாதங்களாக தொடர்ந்தது. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்களின்போது இந்த முடியை வைத்து ஸ்டைல் காட்டினார் விக்ரம். கோட் சூட்டுடன், கொண்டையுடன் அவரது லுக் ட்ரெண்டானது.
இந்நிலையில் தற்போது தங்கலான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் சக நடிகர்களுடன் தான் இணைந்திருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய தாடியை முற்றிலும் மழித்துவிட்டு, தலைமுடியையும் டிரிம் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். க்ளீன் ஷேவ் லுக்கில் விக்ரம் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகியுள்ளன.
இதனிடையே, விக்ரமின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது அடுத்தப்படம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களும் சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்ததாக தங்கலான் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் சில காலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்தப்படத்தை கவனமாக தேர்ந்தெடுக்க விக்ரம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











