மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் கர்ணன பட இயக்குநர் மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.

இரண்டாவதாக நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்திற்கு பாராட்டு

படத்திற்கு பாராட்டு

பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. இந்தப் படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இயக்குநர் மாரி செல்வராஜையும் தனுஷின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

மூன்று முறை மாற்றம்

மூன்று முறை மாற்றம்

கொடியன்குளம் சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. இதன் காரணமாக படத்தில் மூன்று முறை மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்ணன் பட குழுவினர் மீண்டும் இணைய உள்ளனர்.

மீண்டும் இணைகிறோம்

மீண்டும் இணைகிறோம்

இதனை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கர்ணனின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜூம் தானும் மீண்டும் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு

பிரிபுரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஏற்கனவே மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X