பிக்பாஸ் அல்டிமேட்ல இருந்து எலிமினேட் ஆன சினேகன்... யாரை பார்த்துருக்காருன்னு தெரியுமா?
சென்னை : டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் பாடலாசிரியர் சினேகன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களை கடந்து சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக காணப்பட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரி 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன் விலகல்
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கினார் உலக நாயகன் கமல்ஹாசன். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார். ஆனால் தன்னுடைய ஷூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்

நேரலையில் பிக்பாஸ்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சிறப்பான ப்ரமோக்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சிறப்பான ப்ரமோக்கள் வெளியாகும்போது அந்த நிகழ்ச்சியை நேரடியாக சென்று நேரலையில் ரசிகர்கள் உடனடியாக பார்க்கும் சூழல் தற்போது காணப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு உத்திகளையும் பிக்பாஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சினேகன் எலிமினேஷன்
இதையடுத்து நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் பாடலாசிரியர் சினேகன் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

வனிதா விஜய்குமாருடன் சந்திப்பு
இந்நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் நேரடியாக இன்றைய தினம் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் தாடி பாலாஜி ஆகியோரை சந்தித்துள்ளார். இவர்களின் இந்த சந்திப்பின்போது சினேகனின் மனைவி கனிகாவும் உடனிருந்தார். இவர்களது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











