தமிழகத்தில் மார்கெட்டை பிடிக்க தெலுங்கு நடிகர்களை தயாராக சொல்லும் தமிழ் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: இந்த பொங்கலுக்கு தெலுங்கு திரையுலகில் வெளியான படங்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேறு நிக்கேவரு படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகியது.

மகேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகர் தன் நடிப்பால் பலரை கவர்ந்தவர். இவர் படம் வரும் பொழுது அங்கு திருவிழா போல் கொண்டாட்டங்கள் இருக்கும். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் இந்த படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார்.
இப்படத்தில் இவருடன் ராஷ்மிகா மந்தனா,விஜய சாந்தி,பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் தன் முந்தைய படங்களில் பார்க்காத மகேஷ் பாபுவை இதில் பார்ப்பீர்கள் என்று அவரே கூறியுள்ளார்.
இப்படத்திற்கு தமிழகத்தில் சென்னை,கோவை,சேலம்,மதுரை போன்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதே போல மற்றுமொரு தெலுங்கு படமாக அலோ வைக்குந்தா புரமுலோ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் அவருக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே மற்றும் தபு, நிவேதா பெத்துராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை திரி விக்ரம் இயக்கியுள்ளார் ஆக்ஷன் கலந்த ஒரு குடும்ப திரைப்படமாக இதனை எடுத்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏற்கனவே என் வீடு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் இங்கு வெளியானது தற்போது இந்த படமும் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் உண்டு. இப்படத்தின் வெற்றி அதனை காட்டியுள்ளது. அவரின் நடனத்திற்கு மயங்காத பெண்களே கிடையாது. அங்கு இவர் படங்களை கொண்டாடுவதை போல இங்கும் கொண்டாடுகிறார்கள். இவ்விரண்டு படங்களும் வெற்றி பெற்றதாகவே கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











