Vijay - லியோ சக்சஸ் மீட் முடிந்தது.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன தெரியுமா?.. இதோ லேட்டஸ்ட் தகவல்
சென்னை: Vijay (விஜய்) லியோ படத்தின் சக்சஸ் மீட் முடிந்ததை அடுத்து விஜய்யின் அடுத்த மூவ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 560 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதற்கு முன்னர் அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும்கூட நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோவாகவும் மாறியிருக்கிறார் அவர்.

தளபதி 68: லியோ படத்தில் நடித்து முடித்த விஜய் தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் தற்போது பிஸியாக நடந்துவருகிறது. இப்படத்துக்காக விஜய்யின் சம்பளம் 150 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லியோ சக்சஸ் மீட்: இதற்கிடையே லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காத சூழலில் அந்தப் படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி அசத்தினார். ஆனால் அரசியல் பிரவேசம் குறித்து ஏதேனும் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுகுறித்து ரொம்ப பேசாமல் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று மட்டும் முடித்துக்கொண்டார்.
உறுதி: இதனை பார்த்த ரசிகர்கள் 2026ல் அரசியலுக்கு வருவது உறுதி என்பதைத்தான் அவர் இப்படி மறைமுகமாக சொல்கிறார் என்றும்; விழாவில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்டோர் எல்லாம் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை ஆணித்தரமாக சொல்லிசென்றுவிட்டனர் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கம்: அதற்கேற்றபடிதான் விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகளும் இருப்பது அனைவரும் அறிந்தது. முக்கியமாக மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யும் அவர் சில மாதங்களுக்கு முன்புகூட நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.
அடுத்த மூவ்: இந்நிலையில் விஜய்யின் அடுத்த மூவ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தனது மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோரை மாநில அளவில் சந்திக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாகவும் துரிதமாகவும் செய்ய வேண்டும் என்றும் தனது மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.
புஸ்ஸி ஆனந்த்துக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே அவர் உடல்நலம் தேறி தளபதி விஜய் போட்டிருக்கும் கட்டளையை நிறைவேற்றுவார் எனவும்; அந்த சந்திப்பில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த ஹிண்ட் கிடைக்கலாம் என்றும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











