அஜித் வீட்டில் ரெய்டு வதந்தி.. ட்விட்டரில் அடித்துக் கொள்ளும் விஜய் – அஜித் ரசிகர்கள்

சென்னை: நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பு வளர்ப்பதாகவும், வனத்துறையினர் ரெய்டு சென்றதாகவும் வந்த வதந்தியைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள், நடிகர் அஜித் குறித்து ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

இந்த ட்ரோல் சர்ச்சையாகி தற்போது அஜித் மாஸா, விஜய் மாஸா என்ற அளவுக்கு ட்விட்டர் சண்டையாக மாறி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் #UnmatchableThalapathyStardom என்ற ஹாஷ்டேக்கையும், அஜித் ரசிகர்கள் #UnrivalledThalaStardom என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கடவுள் மாதிரி

நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி தல அது ஏனோ தெரியல உங்கள பத்தி தப்பா பேசுனா மட்டும் கோவம் தன்னால வந்துருது... என இந்த அஜித் ரசிகர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

எதிரிகளுக்கு முன்னாடி

எதிரிகளுக்கு முன்னாடி நடிகர் விஜய், பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் போல தனியா, கெத்தா வந்து சண்டை செய்வார் என்ற அர்த்தத்தில் இந்த ரசிகர் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

நாய்கள் தொல்லை

சமூக வலைதளங்களில் வர வர நாய்கள் தொல்லை அதிகமாகிக் கொண்டே போவதாக இந்த தல ரசிகர் ஒரு புகைப்படத்துடன் கொஞ்சம் ஓவராகவே கோபப்பட்டு ட்வீட் போட்டுள்ளார்.

பாம்பு ஆர்மி

அஜித் வீட்டில் மலைப்பாம்பு இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் வந்த வதந்தியைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள், பாம்பு ஆர்மி என கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவாகத்தான் தற்போது ட்விட்டரில் இந்த சண்டை வெடித்துள்ளது.

கோட்டை இல்லை கொடியும் இல்லை

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில் வரும் கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா என்ற வரிகளை இந்த ரசிகர் தல அஜித்துக்காக மாற்றி தனது விஸ்வாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆஃபிஸ் கிங்

தமிழ்நாட்டின் டாப் 3 ஓபனிங்க்ஸ், தமிழ்நாட்டின் அதிக வசூல் படம், தொடர்ந்து 70 கோடிக்கும் அதிகமான தமிழ்நாட்டு ஷேர், கேரளாவில் பிகில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது போன்ற விஜய்யின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை பட்டியலிட்டு இந்த ரசிகர் #UnmatchableThalapathyStardom டேக்கை வலுப்படுத்தி வருகிறார்.

சில்ற இல்லப்பா

ட்விட்டர் சண்டைக்கு அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள் என்றும், அதற்கு சில்ற இல்லப்பா என சூது கவ்வும் படத்தில் வரும் மீமை போட்டு இந்த அஜித் ரசிகர் ட்விட்டர் சண்டையை சூடு கிளப்பியுள்ளார்.

இதுபோன்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் அநாகரீகமான முறையில் சண்டையிடுவது எப்போதுதான் ஓயுமோ என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X