Leo Story- லியோ கதை இதுதானோ?.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்.. அதகளம் செய்யும் ரசிகர்கள்
சென்னை: Leo Story(லியோ கதை) லியோ படத்திலிருந்து புதிய க்ளிம்ப்ஸ் வெளியான பிறகு அதனை டீகோட் செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
விஜய் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க லலித் குமார் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது.

ஷூட்டிங் ஓவர்: படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கி சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து சமீபத்தில்தான் முடிவடைந்தது. இன்னும் கொஞ்சம் பேட்ச் ஒர்க் இருப்பதால் அதனை முடிப்பதற்கு லோகேஷ் மீண்டும் காஷ்மீர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் விஜய் இன்னும் சில நாட்களில் டப்பிங் கொடுத்துவிடுவார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்: லியோ படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட்டுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 29ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியானது. அதில் படு மாஸாக இருந்தார் சஞ்சய். அவர் படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவர்தான் படத்தில் மெயின் வில்லன் என கருதப்படுகிறது.
ஹரோல்ட் தாஸ்: இந்தச் சூழலில் படத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் நேற்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவருக்கான க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. பென்ஸ் காரில் கெத்தாக இறங்கும்படியும் ஒருவரின் கையை வெட்டுவதுபோன்றும் அந்த க்ளிம்ப்ஸில் காட்சிகள் இருந்தனர். அவர் ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
டீகோட் செய்யும் ரசிகர்கள்: இந்நிலையில் லியோ படத்திலிருந்து இரண்டு க்ளிம்ப்ஸ் வெளியானதை அடுத்து அதை டீகோட் செய்து ரசிகர்கள் லியோ படத்தின் கதை இதுதான் என கூறிவருகின்றனர். அதாவது சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ், அர்ஜுனின் பெயர் ஹரோல்ட் தாஸ். இரண்டு பேரின் பெயரின் முடிவிலும் தாஸ் என இருப்பதால் இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
இரண்டு தாஸ்களும் சேர்ந்து விஜய்யுடன் மோதுவதுபோன்று லோகேஷ் படத்தை நகர்த்தி செல்லலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் படம் பார்க்கும்வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதால் அக்டோபர் 19ஆம் தேதிவரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று ரசிகர்களில் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.முன்னதாக சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகிய மூன்று பேருமே ஒரே குடும்பம்தான். அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைதான் லியோ படத்தின் கதை என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











