Nelson Dilipkumar - நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு இதுவா?.. கார்லாம் சும்மா

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் பரிசு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. இயக்குநரின் திரை பயணத்தில் ஒரு படம் தோல்வி அடைவது இயல்புதான். ஆனால் பீஸ்ட் தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள் நெல்சன் திலீப்குமாரை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் சமூக வலைதளங்களில் ரொம்பவே ட்ரோலும் செய்தனர்.

After the success of Jailer Nelson Dilip Kumar has been offered another film opportunity by Sun Pictures

ஜெயிலர்: பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டானார். பீஸ்ட் ரிசல்ட் அப்படி இப்படி இருந்ததால் ஜெயிலரிலும் நெல்சன் சொதப்பிவிடுவாரோ என்று பலரும் சந்தேகப்பட்டனர். படமானது கடந்த 10ஆம் தேதி வெளியானது. நெல்சன் தொதப்பிடுவாரோ என்று பலரும் பட்ட சந்தேகத்தை தனது மேக்கிங் மூலம் அடித்து நொறுக்கினார் நெல்சன்.

நல்ல ரெஸ்பான்ஸ்: படத்தின் முதல் நாளிலிருந்தே ஜெயிலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான் கிடைத்துவந்தது. நெல்சன் திலீப்குமார் பீஸ்ட்டில் விட்டதை இதில் பிடித்துவிட்டார். ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து தானும் ஒரு தரமான கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினார். முக்கியமாக நெல்சனின் டார்க் காமெடி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஒரு பக்கம் இப்படி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதுவரை 600 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருக்கிறது.

சக்சஸ் பார்ட்டி: இதன் மூலம் ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அண்ணாத்த படத்துக்கே சிறுத்தை சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்தார். எனவே நெல்சனுக்கும் ஏதேனும் வெயிட்டாக பரிசு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அப்படி எதுவும் செய்யவில்லை.

சன் பிக்சர்ஸின் பரிசு: இந்நிலையில் நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பரிசு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக வெற்றியை தந்த இயக்குநருக்கு கார் பரிசாக கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் நெல்சனுக்கோ வேறு மாதிரி கொடுத்திருக்கிறதாம். அதாவது சன் பிக்சர்ஸ் பேனரில் இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் நெல்சனுக்கு வழங்கியிருக்கிறதாம்.

அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்துக்கு நெல்சன் வாங்கிய சம்பளத்தையே இரு மடங்காக்கி அடுத்த படத்துக்கு சம்பளமாக கொடுக்க தயாராகி இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். விரைவில் சன் பிக்சர்ஸ் - நெல்சன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X