Jailer - ஜெயிலர் சக்சஸ்.. கலாநிதி மாறன் கொடுத்த செக்கில் இருந்த தொகை இவ்வளவா?

சென்னை: Jailer Success (ஜெயிலர் சக்சஸ்) ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத்துக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்கில் இருந்த தொகை குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த்தும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.

After the success of the film Jailer, information has come out about the amount in the cheque given by Kalanithi Maran

வசூலில் மெகா மாஸ்: படம் ரிலீஸாகி ஒரு வாரத்தின் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஒரு வார முடிவில் 375 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. மேலும் இதுவரை 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமேசான் ப்ரைமிலும் கடந்த ஏழாம் தேதி ஜெயிலர் ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி மாறன் பரிசு: இந்தச் சூழலில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்துவருகிறார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளும்படி பணித்தார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

படக்குழுவினருக்கு பரிசு: இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளருக்கு மட்டும் கலாநிதி மாறன் பரிசு கொடுத்துவிட்டார். படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இதனையடுத்து படத்தில் பணியாற்றியவர்களை நேரில் அழைத்து கோல்டு காயின் கொடுத்து தடபுடலாக விருந்து வைத்தார் கலாநிதி.

செக்கில் என்ன?: இந்நிலையில் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்கில் இருந்த தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ரஜினிக்கு கொடுத்த செக்கில் 30 கோடி ரூபாயும், நெல்சன், அனிருத்துக்கு கொடுக்கப்பட்ட செக்கில் முறையே 5 கோடி ரூபாய், 2 கோடி ரூபாயும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகையானது மூவருக்கும் வழங்கப்பட்ட சம்பளம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X