Soori - விடுதலை கொடுத்த வெற்றி.. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம்.. வேற லெவல்ல போறாரே

சென்னை: Soori (சூரி) விடுதலை படத்தின் வெற்றியை அடுத்து புதிதாக இன்னொரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சூரி.

செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தவர் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார்.

After the success of Viduthalai Soori is playing the hero in another new film

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுற்கேற்ப சூரியை சினிமா கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.

முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.

After the success of Viduthalai Soori is playing the hero in another new film

ஹீரோ சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. விடுதலை 2 ஷூட்டிங் தற்போது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

புதிய படம்: இதனையடுத்து கூழாங்கல் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சூரி. எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூரியுடன் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X