யானை கொடுத்த சூப்பர் டூப்பர் சக்சஸ்.. அடுத்ததா அருண் விஜய் யாரோட இணைஞ்சிருக்கார் தெரியுமா?

சென்னை : நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியானது யானை படம்.

Recommended Video

Arun Vijay | School Friends தான் நல்லது கெட்டது இரண்டையும் சொல்லுறவங்க | *Interview

இதை அருண் விஜய்யின் தங்கை கணவர் ஹரி இயக்கியிருந்தார். இந்தப் படம் தற்போது சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் படத்தையடுத்து தற்போது அருண் விஜய்க்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அஜித்துடன் இவர் வில்லனாக நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு சரியான முகவரியை கோலிவுட்டில் கொடுத்தது. இதையடுத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.

 ஹரியுடன் கூட்டணி

ஹரியுடன் கூட்டணி

இந்நிலையில் முதல்முறையாக தன்னுடைய தங்கை கணவர் ஹரி இயக்கத்தில் இவர் யானை என்ற படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் முதல்தாரத்து மகன்களான தன்னுடைய அண்ணன்களை பிரிந்து வாடும் அருண் விஜய், தொடர்ந்து இரு குடும்பங்களையும் சேர்த்து வைப்பதை கதைக்களமாக படம் கொண்டுள்ளது.

சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

சாதாரண கதைக்களம்தான் என்றாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ஆகியவை படத்தை ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்க்கும் இயக்குநர் ஹரிக்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது.

 வசூல்வேட்டை செய்யும் யானை

வசூல்வேட்டை செய்யும் யானை

இந்தப் படம் தற்போது தமிழகத்தில் மட்டுமே ரூ.12.5 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி அவருக்கு சிறப்பான வாய்ப்புகளையும் குவித்து வருகிறது. ஏற்கனவே அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர் போன்ற படங்கள் அவரது கைவசம் உள்ளது.

ஏஎல் விஜய்யுடன் கூட்டணி

ஏஎல் விஜய்யுடன் கூட்டணி

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் ஏஎல் விஜய்யுடன் அருண் விஜய் புதிய படத்திற்கான கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X