Maniratnam: தக் லைஃப் படத்துக்கு பிறகு மணிரத்னத்தின் அடுத்தப்படம்.. ஸ்கெட்ச் சூப்பரா இருக்கே!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என பிரம்மாண்ட படங்களை கொடுத்து வந்துள்ளார். இந்த படங்கள் அவருக்கு மிகச் சிறப்பான பெயரை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
தக் லைஃப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக குறுகிய பட்ஜெட்டில் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்காக மணிரத்னம் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறுகிய பட்ஜெட்டில் மட்டுமில்லாமல் குறுகிய கால தயாரிப்பாகவும் இந்தப்படத்தை அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம்: வித்தியாசமான கதைகளை வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுப்பதில் முன்னணி இயக்குநராக காணப்படுபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது பல படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் குறைந்த முதலீட்டு படங்களை மட்டுமில்லாமல் பிரம்மாண்ட படங்களையும் இவர் அடுத்தடுத்து கொடுத்து வருகிறார். இவரது பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் மிகப் பெரிய கவனத்தையும் வரவேற்பையும் வசூலையும் கொடுத்துள்ளன.
மல்டி ஸ்டார் படங்கள்: இந்த படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகவும் அமைந்தன. இத்தனை நடிகர்களை வைத்து வேலை வாங்குவது மணிரத்னம் போன்ற ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த இரண்டு பாகங்களையும் 155 நாட்களிலேயே மணிரத்னம் இயக்கி முடித்தார் என்ற தகவலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்து மிகப்பெரிய அனுபவங்களை பெற்ற ரசிகர்களுக்கு, இவரது படைப்பாக்கமும் பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்தது. ஆயினும் சில கலவையான விமர்சனங்களையும் இந்த படங்கள் பெற்றன.
மணிரத்னம் அடுத்தப்படம்: இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் குறைந்த முதலீட்டில் ஒரு படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முற்றிலும் புதுமுகங்களை அவர் களமிறக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறைந்த பட்ஜெட் படம்: படத்தை குறுகிய காலத் தயாரிப்பாக அவர் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான வித்தியாசமான கதையை அவர் ரெடி செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு எடுக்கப்பட்டுவரும் படங்கள் மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் பாணியில் தன்னை மணிரத்னம் இணைத்துக் கொண்டுள்ளார். முன்னதாக அவர் இதுபோன்ற சில படங்களை கொடுத்துள்ள நிலையில், இந்தப் படம் எத்தகைய கதைக்களத்தை கொண்டிருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











