Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
துணிவு டூப் நடிகர் போட்டோவால் வெடித்த சர்ச்சை.. பிகில் டூப்பை தோண்டி எடுத்து அஜித் ரசிகர்கள் சண்டை!
சென்னை: விஜய் மற்றும் அஜித் ஒரு முடிவோடு தான் வரும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோத வேண்டும் என முடிவு செய்து உள்ளனர்.
இப்போதே ஒவ்வொரு விஷயத்திலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சண்டையை வெறித்தனமாக போட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான அஜித்தின் பாடி டபுள் நடிகர் சுதாகரின் போட்டோக்கள் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் பிகில் படத்தின் டூப்பையும் தோண்டி எடுத்து அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஒரு கூட்டு கிளியான வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா ரஞ்சித்… விஜய் ஆண்டனி வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

எல்லாருக்குமே டூப் இருக்கு
சினிமாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் தான் உயிரை பணயம் வைத்து ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்து வருகின்றனர். பறந்து பறந்து அடிப்பதும், பல மாடியில் இருந்து குதிப்பதும் பாடி டபுள் எனும் சினிமா டூப் கலைஞர்கள் செய்து விட்டு க்ளோஸ் அப் ஷாட்டில் டாப் ஹீரோக்கள் செய்வது போலத்தான் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே எல்லா ஹீரோக்களுக்கும் டூப் வைக்கும் வழக்கம் சினிமாவில் உள்ளது.

அப்படியொரு பெருமை
ஆனால், சில நேரங்களில் சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை டூப் கலைஞர்கள் இல்லாமல் நாங்களே செய்கிறோம் என நடிகர்கள் செய்வதும் உண்டு. சில நடிகர்களுக்கு டூப்பே வைத்ததில்லை என்கிற பெருமையும் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான இமேஜை உயர்த்தி வருகிறது. ஆனால், ஹீரோ நடித்து ரசிகர்கள் தியேட்டரில் சிலாகித்த சில காட்சிகள் அவர் செய்யவில்லை அவருக்கு பதிலாக அவருடைய டூப் தான் செய்தார் என தெரிய வரும் போது இதுபோன்ற சர்ச்சைகளும் ட்ரோல்களும் எழத்தான் செய்கின்றன.

துணிவு டூப்
வலிமை படத்தின் பைக் ஓட்டும் சாகச காட்சிகளையே டூப் ஒருவர் தான் அஜித்துக்கு பதிலாக செய்தார் என்கிற தகவல்கள் வெளியான நிலையிலேயே பயங்கரமாக ஓட்டப்பட்ட நிலையில், தற்போது துணிவு படத்தில் அஜித் நடித்த சண்டைக் காட்சிகளுக்கு அச்சு அசல் அவரை போலவே இருக்கும் டூப் நடிகர் சுதாகரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியானது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

வெறுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்
துணிவு படத்தில் அஜித் நடிக்கவே இல்லை என்றும் 70 சதவீத காட்சிகளில் டூப் நடிகர் சுதாகர் தான் அவருக்கு பதிலாக நடித்தார் என்றும் நடிகர் அஜித் பைக் டூருக்காக இந்தியா முழுவதும் சுற்றியும் சர்வதேச நாடுகளில் பைக் டூர் சென்றதையும் வைத்து பங்கமாக விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்ற ஆரம்பித்தனர்.

பிகில் டூப்
துணிவு டூப் பிரச்சனை டிரெண்டான நிலையில், பதிலடி கொடுக்க நினைத்த அஜித் ரசிகர்கள் பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நடிகர் ஸ்ரீராம் உள்ளிட்டோர்களின் போட்டோக்களை எடுத்துப் போட்டு பிகில் படத்தில் விஜய் 80 சதவீதம் நடிக்கவே இல்லை என சண்டை போட்டு வருகின்றனர்.

சோஷியல் மீடியா சண்டை
ஏற்கனவே அஜித் மற்றும் விஜய்யை எந்தளவுக்கு இழிவுப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு மார்பிங் செய்யப்பட்ட கேவலமான போட்டோக்களையும் மீம்களையும் இரு தரப்பு ரசிகர்களும் பதிவிட்டு சோஷியல் மீடியாவில் சண்டை போட்டு வரும் நிலையில், தற்போது இந்த பாடி டபுள் சண்டை மேலும், சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டபுள் ஆக்ஷனா
பிகில் படத்தில் நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்த நிலையில், அவருக்கு டூப் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், துணிவு படத்தில் அஜித்துக்கு பாடி டபுள் நடிகர் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.