டூரிஸ்ட் ஃபேமிலிக்குப் பிறகு சூரியின் மாமன் தான் பெரிய கலெக்‌ஷன்.. அடிவாங்கிய டிடி நெக்ஸ்ட் லெவல், ஏஸ்!

சென்னை: இந்த மாதம் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் நானியின் ஹிட் 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. நானியின் ஹிட் 3 திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. மே 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் 235 கோடி வரை லாபம் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

After Tourist Family Soori s Maaman collects well at box office

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 75 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த நிலையில், விரைவில் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் சூரியின் மாமன் படம் மட்டுமே 30 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தானம் vs சூரி vs விஜய் சேதுபதி: இந்த மாதம் மே 1ம் தேதிக்குப் பிறகு மே 16ம் தேதி சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆர்யா தயாரிப்பில் சந்தானம், செல்வராகவன், கெளதம் மேனன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த காமெடி ஹாரர் திரைப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சூரியின் மாமன் திரைப்படம் எமோஷனல் கனெக்ட் ஆன நிலையில், தமிழ்நாடு முழுவதும் மக்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டது. கடந்த வாரம் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையிலும், பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

After Tourist Family Soori s Maaman collects well at box office

டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல்: 20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கபப்ட்ட சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக 19 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் நடிகர் ஆர்யாவுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டத்தை மட்டுமே அந்த படம் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். ஓடிடி விற்பனை மற்றும் சாட்டிலைட் உரிமம் என ஓரளவுக்கு தயாரிப்பாளர்களை கையை கடிக்காத அளவுக்கு படம் வந்துவிடும் என்கின்றனர்.

After Tourist Family Soori s Maaman collects well at box office

ஏஸ் பாக்ஸ் ஆபீஸ்: விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த், யோகி பாபு நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஏஸ் திரைப்படம் இதுவரை 6.47 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதாக sacknilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு பெரிய செட் பேக் படமாக பாக்ஸ் ஆபீஸில் ஏஸ் திரைப்படம் மாறிவிட்டது. அடுத்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள ட்ரெயின் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மாஸ் காட்டிய மாமன் வசூல்: குறைவான பட்ஜெட்டில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதை எழுதி ஹீரோவாக நடித்த மாமன் திரைப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரமும் திரையரங்குகளில் வெளியான புதிய படங்களை விட மாமன் திரைப்படம் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன் படத்தில் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் விஷயங்களையும் இயக்குநர் வைத்திருந்தால், இந்த படமும் டூரிஸ்ட் ஃபேமிலி போல 70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X