டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பெங்களூர்: ஜன நாயகன், டாக்ஸிக் என இந்த ஆண்டு அடுத்தடுத்து 2 படங்களை ரிலீஸ் செய்து மிகப்பெரிய வசூல் வேட்டையை கேவிஎன் நிறுவனம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு படங்களே அறிவித்த தேதியில் வெளியிட முடியாத சோகத்துக்கு கேவிஎன் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் திட்டமிட்டப்படி ஜனவரி 9ம் தேதி வெளியானால் இந்நேரம் தியேட்டர் ரிலீஸை தொடர்ந்து ஓடிடியிலேயே அந்த படம் வெளியாகி இருக்கும். அமேசான் நிறுவனத்துக்கும் ஜன நாயகன் தாமதமாகும் நிலையில் பெரிய இழப்பு என்கின்றனர்.

மேலும், யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படமாவது மார்ச் 19ம் தேதி வெளியாகி அந்த இழப்பை சரி செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் வெளியாகாது என யஷ் அறிவித்து விட்டார். இந்நிலையில், மார்ச் 19ம் தேதி இன்னொரு படத்தை இமிடியேட்டாக வெளியிட முடிவு செய்துள்ளது கேவிஎன் நிறுவனம்.
மார்ச் 19 ரிலீஸ்: ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 மார்ச் 19 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னமும் அந்த படத்தின் டிரைலர் வெளியாகவில்லை. அந்த படமும் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளதாக திரையுலகில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தமிழில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், டார்லிங் கிருஷ்ணாவின் 'லவ் மாக்டெயில் 3 (Love Mocktail 3) திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லவ் மாக்டெயில் 3: டார்லிங் கிருஷ்ணாவின் கன்னட படமான லவ் மாக்டெயில் படத்தை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வரும் மார்ச் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது. அதன் அறிவிப்பை தான் தற்போது வெளியிட்டுள்ளது. கேவிஎன் தயாரித்த ஜன நாயகன் மற்றும் டாக்ஸிக் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், மீண்டும் படங்களை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு கேவிஎன் நிறுவனம் வந்துள்ளது.
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?: டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என யஷ் அறிவித்த நிலையில், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் ஆனதா? படம் எப்போது வெளியாகும் போன்ற கேள்விகளை தொடர்ந்து கேவிஎன் நிறுவனத்திடம் விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த அப்டேட்டை பார்த்தவுடனே அதிலும் ஜன நாயகன் சென்சார் மற்றும் ரிலீஸ் அப்டேட் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











