அவன் கெடக்குறான்!.. உதயநிதி போட்ட ஒரே ஒரு ட்வீட்.. இணையத்தை அதிர வைக்கும் லியோ மீம்ஸ்!
சென்னை: லியோ திரைப்படம் எல்சியூ தான் என்பதை உறுதி செய்யும் வகையில் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவு லியோ படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்து விட்டு கடைசியில் #LCU போட்டது விஜய் ரசிகர்களை சந்தோஷத்திலும் அதே நேரத்தில் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், அனுரா காசியப், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் லியோ திரைப்படம் எல் சியூ தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தைப் பார்த்துவிட்டு படம் சூப்பராக உள்ளது என்றும் தளபதி விஜய் அண்ணா, லோகேஷ் கனகராஜ், அனிருத், அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அசத்தியுள்ளனர் என்னை பாராட்டி விட்டு கடைசியாக ஹேஸ்டேக் எல்சியூ போட்டு ஒட்டுமொத்த சோலியையும் முடித்து விட்டார்.
சுமார் 90க்கும் மேற்பட்ட பேட்டிகளை கொடுத்து வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு இடத்திலும் மறந்தும் கூட லியோ திரைப்படம் எல்சியூ என்பதை ரிவியூ செய்யாத நிலையில், படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே இப்படி உதயநிதி ஓபன் பண்ணி விட்டாரே என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களைப் போட்டு வருகின்றனர்.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு: ஒரு வருஷமா பொத்தி பொத்தி வச்சிருந்த சீக்ரெட்டை இப்படி சல்லி சல்லியா போட்டு உடைச்சிட்டீங்களே சின்ன எஜமான் என கான்ட்ராக்டர் நேசமணியாகவே லோகேஷ் கனகராஜை மாற்றி இணையத்தை அலற விட்டு வருகின்றனர்.
அவன் கெடக்குறான்: இதுவரை கட்டிக் காப்பாற்றி வந்த ரகசியத்தை கடைசி நேரத்தில் உதயநிதி ரிவீல் செய்த நிலையில், சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் அவன் கெடக்குறான் டெம்பிளேட்டை தூக்கிப் போட்டு டிரெண்டிங் மீம் ஆக்கி உள்ளனர்.

நரம்பு புடைக்குதே: ராட்சசன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு நரம்புகள் புடைக்கும் காட்சியை பதிவிட்டு எல்சியூவில் லியோ இருப்பதை அறிந்ததும் ரசிகர்களின் மன நிலை இதுதான் என்றும் இந்த முறை 1000 கோடி கன்ஃபார்ம் என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











