வாடிவாசல் படத்துக்கு அப்புறம் விஜய்யுடன் தான்.. அந்த பிரபல ஹீரோவுக்கு தயார் பண்ண கதையா?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் கூடிய விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து படம் பண்ண போவது உறுதியாகி உள்ளது.

Recommended Video

ஒரே டேக்.. மிரட்டும் அசுரன் கிளைமேக்ஸ்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் மேக்கிங் வீடியோ!

சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு முன்னதாக, சூரியை வைத்து ஒரு படத்தை முடிக்க உள்ளார் வெற்றிமாறன்.

இந்த இரு படங்கள் முடித்த கையோடு, விஜய்யுடன் இணைந்து வேற லெவல் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேற லெவல் இயக்குநர்

வேற லெவல் இயக்குநர்

பல்சர் பைக்கை கதையின் கருவாக வைத்து ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். அடுத்தபடியாக சேவல் சண்டையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே ஆடுகளம் படம் மூலமாக ஆச்சர்ய பட வைத்தார். அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை, அசுரன் எல்லாமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.

பக்கா கெமிஸ்ட்ரி

பக்கா கெமிஸ்ட்ரி

பொல்லாதவன் படத்தில் தொடங்கிய வெற்றிக் கூட்டணி நடிகர் தனுஷுடன் அசுரன் படம் வரை தொடர்கிறது. நடுவில் விசாரணை படத்தில் மட்டும் தான் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து பணியாற்றவில்லை. நடிகர் தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் அந்த அளவுக்கு பக்காவான கெமிஸ்ட்ரி உள்ளது.

மண் சார்ந்த படங்கள்

மண் சார்ந்த படங்கள்

வட சென்னையாக இருந்தாலும் சரி, மண் சார்ந்த கிராமம் ஆக இருந்தாலும் சரி, அழுத்தமான கதைக் களத்தை உருவாக்கிய பின்னரே, நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்து படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவது இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றி ஃபார்முலா. அந்த ஃபார்முலா இன்று அவரை அவருக்கு கை கொடுத்து வருகிறது.

சூரி ஹீரோ

சூரி ஹீரோ

வடசென்னை படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆவல் வெற்றிமாறனுக்கு இருந்தாலும், முதல் பாகத்தின் ரிலீசுக்கு பின் நிகழ்ந்த நிகழ்வுகள், அந்த படத்தை தொடர முடியாமல் அவரை கட்டிப் போட்டு விட்டது. அசுரன் படத்திற்கு பிறகு, இப்போ காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

வாடிவாசல்

வாடிவாசல்

நாவல்களை வைத்து படமாக்கும் மரபு கோலிவுட்டில் வெகுவாக குறைந்து விட்டது. கமர்ஷியல் படம் என்கிற பெயரில் இங்கே உருவாகும் படங்களை பார்த்தால், படம் பாக்குறேன் கதையே இல்லை என பாடத்தான் தோன்றுகிறது. அதிலிருந்து சற்று மாறுபட்டு ஆட்டோ சந்திரனின் லாக்கப் நாவலை விசாரணையாகவும், பூமணியின் வெக்கை நாவலை அசுரனாகவும் இயக்கிய வெற்றிமாறன், வாடிவாசல் எனும் நாவலை அதே பெயரில் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார்.

விஜய்க்காக வெயிட்டிங்

விஜய்க்காக வெயிட்டிங்

இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வாடிவாசல் படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்ய உள்ளதாகவும், தளபதி விஜய் ஓகே சொன்னால், அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் அதிரடியான அப்டேட்டை கொடுத்து, விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அந்த ஹீரோவுக்கு சொன்ன கதையா?

அந்த ஹீரோவுக்கு சொன்ன கதையா?

அசுரன் படத்தை பார்த்த ஷாருக்கான், வெற்றிமாறனுடன் ஒரு படத்தை பண்ண வேண்டும் என முடிவு செய்தார். வெற்றியும் ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி இருந்தார், இயக்குநர் அட்லியும் ஒரு கதை சொல்லி உள்ளார். அடுத்ததாக ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்கப் போகிறாரா? அட்லி இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஷாருக்கானுக்கு சொன்ன கதையைத் தான் விஜய்க்காக வேற லெவலில் ரெடி பண்ண திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடித்தால், நிச்சயம் தளபதி விஜய்யை வேறு ஒரு ஷேடில் பார்க்கலாம் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X