வாத்தி கம்மிங்கை ஓவர்டேக் செய்யும் குக்கூ...இணையத்தில் தீயாய் பரவ விடும் பிரபலங்கள்
சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் கொரோனாவால் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டாலும், பட ரிலீசுக்கு முன்பே வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகி விட்டன. படத்தின் ரிலீசிற்கு பிறகு வாத்தி கம்மிங், உலக சாதனை படைத்து விட்டது.
கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தோளை குலுக்கும் ஸ்டெப்பை போட்டு, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோக்கள் வைரலாகி, ட்விட்டரில் டிரெண்டிங்கும் ஆனது.
Recommended Video

வாத்தி கம்மிங்கை ஓரங்கட்டிய குக்கூ
மாஸ்டர் படம் ரிலீசாகி 2 மாதங்கள் கடந்த பிறகும் வாத்தி கம்மிங் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலை ஓவர் டேக் செய்யும் வகையில் மற்றொரு பாடல் வைரலாகி வருகிறது.
தீயாய் பரவும் தீயின் பாடல்
இது சினிமா பாடல் இல்லை. பாடல் ஆல்பம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடிய 'குக்கூ...குக்கூ...' பாடல் தான் லேட்டஸ்ட் டிரெண்டிங். ஆதி தமிழர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆல்பம் பாடல், 2 வாரங்களுக்கு முன் யூட்யூப்பில் வெளியிடப்பட்டது.
46 மில்லியன் பார்வைகள்
இதுவரை இந்த பாடல் 46 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 1.9 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் இந்த பாடல் ஒலிக்க துவங்கி விட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் பாடலாக இது மாறி வருகிறது.
வைரலாக்கும் பிரபலங்கள்
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, லைக்குகளை அள்ளி வருகின்றனர். கடந்த வாரம் சின்னத்திரை நடிகை மைனா, நேற்று சின்னத்திரை நடிகை ஆலியா மானசா இந்த பாடலுக்கு நடனமாடிய நிலையில், இன்று நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











