வாத்திக்காக சைலண்ட் மோடில் இருந்த தனுஷ்... மீண்டும் பரபரப்பாகும் கேப்டன் மில்லர் ஸ்பாட்!

சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த வாரம் 17ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷின் ஹேர் ஸ்டைல், லுக் அனைத்தும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் இருந்தன.

வாத்தி ப்ரோமோஷன், ரிலீஸ்க்காக கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்திருந்தார் தனுஷ்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தக்கட்ட மூவ் என்னவென்பது குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

 வாத்திக்காக சைலண்ட் மோட்

வாத்திக்காக சைலண்ட் மோட்

தனுஷின் நடிப்பில் கடந்தாண்டு அத்ரங்கி ரே, தி கிரே மேன், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியாகின. இதனையடுத்து இந்தாண்டின் முதல் வரவாக தனுஷ் நடித்த வாத்தி கடந்த வாரம் ரிலீஸானது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வாத்தி முதல் நான்கு நாட்களில் 51 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 பரபரக்கும் கேப்டன் மில்லர் ஸ்பாட்

பரபரக்கும் கேப்டன் மில்லர் ஸ்பாட்

முன்னதாக வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட மற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார் தனுஷ். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், மிரட்டலான லுக் என கேப்டன் மில்லர் கெட்டபில் தான் கலந்துகொண்டார். ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவர் தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ரொம்பவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

 மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்

மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்

பீரியட் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கேப்டன் மில்லர் ஷூட்டிங் தென்காசி பகுதிகளில் நடைபெற்றுவந்த நிலையில், வாத்தி படத்தின் ரிலீஸுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வாத்தி ரிலீஸாகிவிட்டதால் மீண்டும் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ளவுள்ளாராம். ஏற்கனவே தனுஷ் இல்லாத காட்சிகளை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஷூட் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

 விரைவில் கேப்டன் மில்லர் அப்டேட்

விரைவில் கேப்டன் மில்லர் அப்டேட்

தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் கேப்டன் மில்லர் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது தொடங்கவுள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் அதே பகுதிகளில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக தனுஷ் விரைவில் சென்னையில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய படக்குழு ரெடியாகிவிட்டதாம்.

 தனுஷ் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்

தனுஷ் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்

தனுஷ் ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கியமான பாத்திரங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு. கவ்பாய் ஜானருக்கான பீரியட் படத்துக்கு தேவையான பிரம்மாண்டமான செட்டிங் போடப்படுவதை அந்த கிளிம்ப்ஸில் பார்க்க முடிந்தது. மேலும், துப்பாக்கியுடன் தனுஷ் நிற்கும் அந்த கிளிம்ப்ஸ் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் கண்டிப்பாக இந்தப் படம் ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X