அடுத்த சம்பவம்.. வாலி, வரலாறு, மங்காத்த படத்தில் பார்த்ததை விட டெரரான அஜித்தை பார்க்க தயாராகுங்க!

சென்னை: வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார்.

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்ட உள்ள தல அஜித் அடுத்த படத்தில் இதுவரை நடித்திராத நெகட்டிவ் ரோலில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெகட்டிவ் கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் அஜித்துக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான் என்பதால் அடுத்த சம்பவம் வலிமையை விட தரமானதாக உருவாகப் போகிறதாம்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை தல அஜித் இயக்குநர் எச். வினோத்துக்கு அளித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வயதான வழக்கறிஞர் கெட்டப்பில் அஜித் நடித்திருந்தார். ஆனால், வினோத் ஸ்டைலில் ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்த அஜித் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.

வலிமையுடன்

வலிமையுடன்

அஜித் கொடுத்த நம்பிக்கையுடன் வலிமை படத்தை வேற லெவலில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் வினோத். தல அஜித் என்றாலே ரேஸ் தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும் என்பதால் வேற மாறி ரேஸ் காட்சிகள் நிறைந்த படமாக வலிமை படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அடுத்த படமும்

அடுத்த படமும்

இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 படங்களில் நடித்த அஜித் இயக்குநர் வினோத் உடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்த படமும் அவர் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெறித்தனமான ரோல்

வெறித்தனமான ரோல்

இதுவரை தல அஜித்தை ரசிகர்கள் காணாத அளவுக்கு வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் அடுத்த படத்தில் அஜித் நடிக்கப் போவதாக சூப்பரான ஹாட் அப்டேட் கசிந்துள்ளது. வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், மங்காத்தா என ஏகப்பட்ட படங்களில் தனது க்ரே ஷேடை அஜித் காட்டி நடித்துள்ள நிலையில், அதை விட தாறுமாறான கதாபாத்திரத்தில் தல அடுத்த படத்தில் நடிக்கப் போறாராம்.

சதுரங்க வேட்டை மாதிரியா

சதுரங்க வேட்டை மாதிரியா

இயக்குநர் வினோத்தின் அறிமுக படமான சதுரங்க வேட்டை படத்தில் நட்டி நட்ராஜின் கதாபாத்திரமும் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தான். கடைசியாகத்தான் அவர் திருந்துவது போல இயக்கி இருப்பார் இயக்குநர் வினோத். தல அஜித்துடன் இணைந்து மீண்டும் அப்படியொரு வில்லத்தனமான கதையில் தல அஜித் நடிக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X