Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்தடுத்து மெகா பட்ஜெட் படங்களை குறிவைக்கும் உதயநிதி...பிளான் பெரிசா இருக்கே
சென்னை : நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து மெகா பட்ஜெட் படங்களை தேடி தேடி குறிவைத்து வருகிறார். இது கோலிவுட்டிலும் ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
அஜித் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் படத்திற்கும் குறிவைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதே சமயம் சில சிறிய பட்ஜெட் படங்களையும் குறிவைத்து வருவதால் இவர் என்ன பிளான் செய்கிறார். பெரிய நடிகர்களின் படங்களையா அல்லது பெரிய டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களையா என புரியாமல் அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.
எம்ஜிஆர் பேச்சை கேட்காத சில்க் ஸ்மிதா? தியாகராஜன் சொன்ன டாப் சீக்ரெட்.. அப்படி என்ன சொன்னாரு?

தயாரிப்பாளராக ஜெயித்த உதயநிதி
நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்ட உதயநிதி, தயாரிப்பாளராகவே சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி, 2008 ம் ஆண்டு முதல் முறையாக விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

அடுத்தடுத்த அவதாரங்கள்
தயாரிப்பாளராக வெற்றி பெற்ற உதயநிதி, கெளதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் விநியோகஸ்தராகவும் மாறினார். மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்களை விநியோகம் செய்தார். 2012 ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன், மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படம் என ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

பெரிய படங்களுக்கு குறி
சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் உதயநிதி, இதுவரை பக்ரித், அரண்மனை 3 போன்ற சிறிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்து வந்தார். ஆனால் சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்களின் தமிழ்நாட்டு விநியோகத்தை பெற்று அசத்தி வருகிறார் உதயநிதி. அஜித் நடித்த வலிமை படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை வாங்கிய உதயநிதி, அடுத்ததாக ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டு உரிமத்தையும் வாங்கி உள்ளார். இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது.
Recommended Video

அடுத்து இவர் படம் தானா
இதைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் வாங்கி உள்ளது. இந்த படமும் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது.
-
Bloody Sweet: கோல்ட் காயினில் லியோ டைட்டில்.. சாக்லேட் ஃபேக்டரியும் கூர்வாளும்.. தெறிக்குது!
-
தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்
-
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!