'வலிமை' க்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைகிறாரா அஜித் ?

சென்னை : அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் வேலைகள் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுடன் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைய உள்ளது.

ஹச்.வினோத் இயக்குனம் 'வலிமை' படத்தை, போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தை இந்த ஆண்டு ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 'வலிமை' படத்தை போலவே, அடுத்ததாக அஜித் நடிக்க போகும் படம் பற்றி எதிர்பார்ப்பும் இப்போதே எழுந்துள்ளது.

'தல 61' யாருடன்

'தல 61' யாருடன்

'வலிமை' பட கூட்டணியே 'தல 61' லும் தொடர போவதாக தகவல் அடிபடுகிறது. அதே சமயம், அந்த படத்திற்கு முன்பாக மிக முக்கியமான, பிரம்மாண்ட படம் ஒன்றில் அஜித் இணைய உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்லால் படத்தில் அஜித்

மோகன்லால் படத்தில் அஜித்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், அஜித்தை அணுகி, தான் முதல் முறையாக இயக்க போகும் 'பர்ரோஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளாராம். இது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படமாக அமைய உள்ளதாம்.

 நான் பேசவேயில்லை

நான் பேசவேயில்லை

ஆனால் இந்த படத்தின் துவக்க விழாவின் போது இது பற்றி மோகன்லாலிடம் கேட்ட போது, இது ஆதாரமற்ற வதந்தி என்றும், தனது படத்தில் நடிப்பதற்காக அஜித்திடம் பேசவேயில்லை என்றும் மோகன்லால் மறுத்துள்ளார்.

ஏமாந்து போன ரசிகர்கள்

ஏமாந்து போன ரசிகர்கள்


மோகன்லாலின் இந்த பதில் மோகன்லால் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. முதல் முறையாக இருவரையும் இணைந்து ஒரே படத்தில் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக இது அமைந்துள்ளது.

 டாப் நடிகர்கள் இணையும் படம்

டாப் நடிகர்கள் இணையும் படம்

'பர்ரோஸ்' படத்தில் மோகன்லால், ப்ருத்விராஜ் மட்டுமின்றி இந்தியா மற்றும் சர்வதேச நடிகர்கள் பலரும் நடிக்க உள்ளனராம். அதுமட்டுமல்ல முதல் முறையாக 15 வயதே ஆகும் லைடியன் நாதஸ்வரம் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X