என்ன ஜோடி ஜோடியாய் பாதிக்குதே.. காதலரை தொடர்ந்து கத்ரீனாவுக்கும் பரவிய கொரோனா வைரஸ்!

மும்பை: பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப்புக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கத்ரீனா கைஃப்பும் நடிகர் விக்கி கவுஷலும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், கத்ரீனா கைஃப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

எல்லாரும் சிக்குறாங்களே

எல்லாரும் சிக்குறாங்களே

ஒட்டுமொத்த பாலிவுட்டும் முறையான கொரோனா விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகளை மேற்கொள்கிறதா என்கிற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் நடிகர்கள் அக்‌ஷய் குமார், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கத்ரீனாவுக்கு கொரோனா

கத்ரீனாவுக்கு கொரோனா

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. மேலும், அவர் தனது வீட்டிலேயே ஹோம் குவாரண்டைனில் தனிமைப்பட்டு கிடப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றனர்.

ஜோடி ஜோடியாய்

ஜோடி ஜோடியாய்

நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது காதலியும் நடிகையுமான ஆலியா பட்டுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விக்கி கவுஷலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நடிகை கத்ரீனா கைஃப்புக்கு அவர் மூலமாகத் தான் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றும், என்ன பாலிவுட்டில் ஜோடி ஜோடியாய் கொரோனா பரவுதே என்றும் நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

Recommended Video

கத்ரினா ஃகைப்பா? அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் பிரபலம் வீடியோ
ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியான கத்ரீனா கைஃப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட செய்தி காட்டுத் தீ போல பரவிய நிலையில், #KatrinaKaif என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கூடிய விரைவில் நடிகை கத்ரீனா கைஃப் குணமாகி வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X