விக்னேஷ் சிவனை தொடர்ந்து இன்னொரு இயக்குநரும் அப்பாவானார்.. சந்தோஷத்தில் தர்மபிரபு இயக்குநர்!
சென்னை: யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தர்மபிரபு படத்தை இயக்கிய இயக்குநர் முத்துக்குமரன் அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ளார்.
தொடர்ச்சியாக சினிமா பிரபலங்களுக்கு திருமணங்கள் நடைபெற்ற வந்த நிலையில், அடுத்து என்ன தொட்டில் கட்டும் விழா தான் என்பது போல குழந்தை பிறக்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
நடிகை காஜல் அகர்வால், பிரணிதா, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் பெற்றோர்களான நிலையில், இயக்குநர் முத்துக்குமரனும் தந்தையாகி விட்டார்.

இது குழந்தைகள் பிறக்கும் வாரம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகிவிட்டோம் என அறிவித்து இருந்தனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனை போலவே இன்னொரு தமிழ் சினிமா இயக்குநரும் தந்தையாகி உள்ள சூப்பரான செய்தி வெளியாகி உள்ளது.

அப்பாவான இயக்குநர்
யோகி பாபுவின் தர்மபிரபு, வரலட்சுமி சரத்குமார் நடித்த கன்னிராசி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்துக்குமரன், யோகேஸ்வரி தம்பதியினருக்கு நேற்று இரவு (அக்டோபர் 13) அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஆனந்த யாழ் சத்தம்
பெண் குழந்தை பிறந்த நிலையில், இனி இயக்குநர் முத்துக்குமரன் வீட்டில் தினமும் ஆனந்த யாழ் சத்தம் தான் கேட்கப் போகிறது. மகளதிகாரம் என அவரும் போஸ்ட்டுகளை போடுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். யோகி பாபு வந்து குழந்தையை பார்த்தாரா? என்றும் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.

யோகி பாபுவின் நண்பர்
யோகி பாபு லொள்ளு சபா நிகழ்ச்சியின் உதவி இயக்குநராக இருந்த போதே முத்துக்குமாரும் இவரும் ஒரே அறையில் தான் வலசரவாக்கத்தில் தங்கியிருந்தனர். இருவருக்குமிடையே 13 வருட நட்பு. சினிமா இயக்குநர் ஆக வேண்டிய கனவுகளுடன் யோகி பாபு இருந்த நிலையில், நடிகராக மாறிய அவரை, ஹீரோவாக தர்மபிரபு படத்தின் மூலம் மாற்றியதே முத்துக்குமரன் தான் தர்மபிரபு 2ம் பாகம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் அவர் தற்போது சிவாவின் சலூன் படத்தை இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











