விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத்.
பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த 'போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், 'இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











