twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

    |

    After Vijay, it's Bharath with Mohanlal
    சென்னை: ஹிந்தியில் 'ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கோத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இப்படத்தில் இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கிறார்.

    இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத்.

    பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த 'போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், 'இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Even as Bharath is busy shooting for his debut Bollywood film Jackpot, he's also doing a Malayalam film titled Koothra. And, the Boys star is sharing screenspace with Mollywood superstar Mohanlal in this movie. Interestingly, Ilayathalapathy Vijay is also currently acting with Mohanlal in Jilla.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X