மீண்டும் வில்லனாக மாறும் செல்வராகவன்...இப்போ யாருக்கு தெரியுமா ?
சென்னை : பல டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைரக்டர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை தற்போது இயக்கி வருகிறார் செல்வராகவன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.

நடிகரான செல்வராகவன்
அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார் செல்வராகவன். முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து, மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளார் செல்வராகவன். இதைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இவர் படத்தில் லீட் ரோலா
அதோடு திரொளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய டைரக்டர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார் செல்வராகவன். இரண்டு அதிரடி டைரக்டர்கள் ஒன்றாக இணையும் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறது.

மீண்டும் வில்லனாகிறார்
லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தில் வில்லன் ரோலில் நடிக்க செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க போகிறார்.

இவருக்கு வில்லனா
பெயரிடப்படாத இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்களாம். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











