Vijay: கேமராவ திருப்பாதே.. தவெக தலைவர் விஜய்யை தாறுமாறா கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஏஐ வேற!
சென்னை: நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக மாறியுள்ள விஜய் மீடியாவை சந்திக்க தொடர்ந்து அஞ்சி வருவதாக கடுமையான விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், NDTV டீமுக்கு விஜய் ஆஃப் கேமரா பேட்டியளித்துள்ளார்.
விஜய் தனது அரசியல் லட்சியத்தையும் தனது போராட்ட குணத்தையும் தெள்ளத் தெளிவாக கூறியதை வியந்து அவர்கள் பேசி விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் ஷேர் செய்தது தான் இன்றைக்கு ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

ஆனால், அதே சமயம் ஆன் கேமரா பேட்டிக் கூட கொடுக்க முடியாமல் அஞ்சி நடுங்குகிறாரா விஜய் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்காமல் அஜித் ஆங்கில தொலைக்காட்சிக்கு ஆன் கேமரா பேட்டியளித்தார். அது போன்று கூட விஜய் கொடுக்கவில்லையே ஏன்? என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
ஒர்க் ஃப்ரம் ஹோம் பேட்டி: NDTV சேனல் டீமை பனையூருக்கு அழைத்து விஜய் ஆஃப் கேமரா பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்னமும் விஜய் ஒர்க் ஃப்ரம் அரசியல் செய்துக் கொண்டிருக்கிறாரே என திமுக, அதிமுக, நாதக என பல கட்சிகளும் கலாய்க்கத் தொடங்கி விட்டனர். பத்திரிகையாளர்களை எதிர்கொண்டு பேட்டிக் கொடுக்கக் கூட தயக்கம் காட்டும் விஜய் எப்படி தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்றும் மக்கள் பிரச்னைக்கு முதல் ஆளாக வந்து நிற்காகமல் ஓடிவிட்டால் என்ன செய்வது என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
உலக மகா ஜோக்கர்: "கேமரா off பண்ணிட்டு interview கொடுத்துருக்கான் யா 😂😂 உலக மகா ஜோக்கர் @TVKVijayHQ" என ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு மற்ற கட்சியினர் தவெக தலைவர் விஜய்யை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
கேமராவை திருப்பாதே: மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் கேமரா ஆன் பண்ணுங்க, கேள்விகளை கேளுங்க, பேட்டி முடிந்ததும் கேமரா ஆஃப் பண்ணுங்க என கிளம்பிடுவாங்க, ஆனால், அண்ணா விஜய் இதிலும் புது ரெக்கார்டை படைக்க முடிவு செஞ்சிட்டாரு போல, கேமரா ஆஃப்.. பேட்டி.. ஸ்டில் கேமரா ஆன் என கலாய்த்து வருகின்றனர். ஏஐ மூலம் என்டிடிவிக்கு விஜய் பேட்டிக் கொடுப்பது போன்ற போட்டோக்களையும் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
ஸ்ட்ராங்காக ரெடியாகும் விஜய்: கரூர் சம்பவத்துக்கு முன்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் மக்களை சந்தித்து தனது ஒட்டுமொத்த அரசியல் கருத்தையும் நேரடியாகவே போல்டாக பேசினார். கரூர் சம்பவத்துக்குப் பிறகும் மீண்டும் புதுச்சேரியில் ஆரம்பித்து தமிழ்நாட்டிலும் பிரச்சாரத்தை நடத்தினார். அடுத்ததாக வேலூரில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மக்கள் முன்பாக பேசும் தைரியம் கொண்ட விஜய் மீடியாவை புறக்கணிக்க சில காரணங்கள் இருக்கும் என்றும் ஒவ்வொரு அடியும் ஸ்ட்ராங்காக எடுத்து வைத்து அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறார் விஜய். இன்று அனைவரும் அவரை பற்றியே பேச பேச மக்களிடம் அதுவே பெரிய பரப்புரையாக மாறிவிடும் என தளபதி ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











