GOAT - இந்த ஜோடி சூப்பரா இருக்கே.. மோகன் உடன் சினேகா.. என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாங்க!
சென்னை: வசீகரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிகை சினேகா தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா விஜய்க்கு சினேகா ஜோடி என தகவல்கள் வெளியாகின. ஆனால், லேட்டஸ்டாக வெளியாகியுள்ள போட்டோவை பார்த்தால் ரசிகர்களுக்கு குழப்பம் ஆகும் அளவுக்கு உள்ளது.
மௌனராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்த வெள்ளி விழா நாயகன் மோகன் முதன்முறையாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சினேகாவின் தோள் மீது கை போட்டு மோகன் கொடுத்துள்ள ரொமான்டிக் லுக்கை பார்த்தால் இருவரும் சரியான ஜோடியாக உள்ளார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளது.

மீண்டும் மோகன்: ஒரு காலத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் என்றே நம்பாமல் மைக்கைப் பிடித்து மோகன் பாடும் அனைத்து பாடல்களும் அவரே சொந்த குரலில் பாடினார் என நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் மோகன் மீது வெறித்தனமான அன்பை செலுத்தி வந்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நடிகர் மோகனுக்கு கொடிய நோய் தாக்கியதாக வதந்திகள் பரவிய நிலையில், அவரது சினிமா வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஹரா எனும் படத்தில் நடித்து வரும்போது விஜய்யின் கோட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
அந்த சாம்பார் காமெடியை மறக்க முடியுமா?: விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா வசீகரா படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளியான அந்த படத்தில் விஜய்யின் பேன்ட்டில் சினேகா சாம்பாரை கொட்டி விளையாடும் காட்சிகளை இன்னமும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதன் பின்னர் ஸ்பைடர் மேன் உடையை அணிந்து கொண்டு விஜய் ஆட்டோவில் வந்து இறங்குவது எல்லாம் அப்போது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கோட் படத்தில் தான் சினேகா இணைந்து நடித்து வருகிறார்.
வயதான விஜய்க்கு ஜோடியா?: கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இந்த படத்தில் அப்பா மகன் என நடிகர் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு. அப்பா விஜய்க்கு ஜோடியாக தான் சினேகா நடித்து வருவதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். லைலாவும் இந்த படத்தில் உள்ள நிலையில், கதை எப்படி இருக்கும் யாருக்கு யார் ஜோடி என்பது படம் வந்தால் தான் தெரிய வரும்.
சினேகா தோளில் கை போட்டு: இந்நிலையில், மோகனுக்கு ஒருவேளை சினேகா இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறாரா? என்கிற கேள்வியை தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் சினேகாவின் தோளில் மோகன் கேஷுவலாக கை போட்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், கிளப்பி உள்ளது.
தொடர்ந்து ரசிகர்களை சந்திக்கும் தலைவர்: தளபதியாக இருந்து வந்த விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தலைவராக ஆன நிலையில், தொடர்ந்து பாண்டிச்சேரியில் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து செல்ஃபி எடுத்து மகிழ்கிறார். பாண்டிச்சேரியிலேயே இவ்ளோ கூட்டம் என்றால், சென்னையில் விஜய் பட சூட்டிங் நடந்தால் கூட்டம் அள்ளுமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கோட் படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











