அய்யா.. ராசா… செல்லங்களா.. இது வேற லெவல் டிரெண்டிங்.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

Recommended Video

மாஸ்டர் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய விஜய் | FILMIBEAT TAMIL

சென்னை: ரசிகர்களுடன் தளபதி விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் அலை அலையாக திரண்டனர்.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்குக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், விஜய் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

வேற லெவல் டிரெண்டிங்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடைபெறும் நெய்வேலி என்.எல்.சி பகுதிக்கு நடிகர் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று அலைமோதியது. அவர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்த வீடியோவை கொண்டாடும் வகையில் #MASTERManiaIn2Months மற்றும் #masterarrivingsummer2020 என ஹாஷ்டேக்குளை உருவாக்கி தளபதி ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

2 மாசம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், செளந்தர்யா, ரம்யா, பிரேம் குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 மாசத்துல பிளாக்பஸ்டர் காத்திட்டு இருக்கு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மாஸ்டர் செல்ஃபி

சாதாரணமா, ரசிகர்கள் தான், தங்களுக்கு பிடித்த நடிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், தனது நெஞ்சுக்குள் குடியிருக்கும் ரசிகர்களை பார்த்த விஜய், அவர்களுக்காக வெளியே வந்து, வேன் மேல ஏறி நின்னு செம்ம மாஸாக செல்ஃபி எடுத்துள்ளார். இது தான் மாஸ்டர் செல்ஃபி என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

4வது லுக் எப்படி இருக்கும்?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் மூன்று லுக்குகள் வெளியாகி வெறித்தனம் காட்டி வரும் நிலையில், 4வது லுக் எப்படி இருக்கும் என்ற ரகசியத்தையும் நம்ம அப்டேட் கிங் ரத்னகுமார் தெரிவித்து விட்டார். விஜய்யின் மொபைலில் எடுத்த அந்த செல்ஃபி போட்டோ தான் 4வது லுக்காக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் வெயிட்டிங்.

தம்பி ராசா செல்லங்களா..

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை அனிருத் அட்டகாசமாக ரெடி செய்து வருகிறார். இம்மாத இறுதியில் வெறித்தனம் பாடலுக்கு மேல ஒரு வெறித்தனமாக அந்த பாடல் இருக்கப் போகிறது. அதுமட்டுமின்றி, அடுத்த மாதம் நடைபெற உள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், தம்பி.. ராசா.. செல்லங்களா.. என பிகில் ஆடியோ லான்சில் பேசியதை விட ஒரு மரண மாஸ் ஸ்பீச் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X