விஜய் சேதுபதி மட்டுமல்ல.. இவரும் இருக்காரு.. தளபதி 64 படத்தில் இணையும் அடுத்த பிரபல ஹீரோ!
Recommended Video
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கம் விஜய்யின் 64வது படத்தில் முக்கிய கோலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே விஜய் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.
விஜய் 64 படத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தின் இயக்குனர். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி
இந்த படத்தில் விஜய் சேதுபதி இல்லாமல் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதேபோல் மாளவிகா மோகன் நடிக்க உள்ளார். இது இல்லாமல் இன்னொரு முக்கிய வேடத்தில் ராஷி கண்ணா நடிக்க உள்ளார்.

சிறப்பு விஜய் சேதுபதி
இந்த நிலையில் படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் ரெஜினா கெசாண்ட்ரா நடிக்க உள்ளார். இந்த நிலையில்தான் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற ஹீரோக்கள் பிரபலங்களின் பெயர்களை வெளியிட போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

யார் வருகிறார்
அதன்படி இந்த படத்தில் நடிகர் சாந்தனு நடிக்க உள்ளார். ஆம், இவர் நடிப்பதற்காக இன்றுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விஜய் படம் என்றதும் உடனடியாக படத்தில் நடிக்க சாந்தனு ஒப்புக்கொண்டார் என்று கூறுகிறார்கள்.

அடுத்து யார்
இவர் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தில் இன்னொரு பெரிய ஹீரோ நடிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இது நிறைய நடிகர்கள் நடிக்கும் கதை என்று கூறுகிறார்கள். இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் எடுத்த மாநகரம் படமும் இதேபோல்தான் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











