Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவர் சூர்யாவுக்கு வில்லனா...ஹீரோக்களை வில்லன்களாக மாற்றும் டைரக்டர்கள்
சென்னை : சமீபத்தில் வெளியான படங்களில் சூர்யாவிற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்த படம், சுதா கெங்கரா இயக்கிய சூரரை போற்றி படம். இதனைடுத்து இன்னும் பெயரிடப்படாத சூர்யாவின் 40 வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. மிகப் பெரிய பொருட் செலவில் தயாராக உள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இமான் இசையமைக்க உள்ளார்.
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக, உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் நடிக்க உள்ளார்.விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.
முன்பெல்லாம் பிற மொழி டாப் ஹீரோக்களை தான் தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகப்படுத்தி வந்தனர். பிறகு தமிழ் படத்தின் முன்னாள் ஹீரோக்களை வில்லனாக்கினர். தற்போது விஜய் சேதுபதி, வினய் என தற்போதுள்ள ஹீரோக்களையே, மற்ற ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க வைத்து வருகின்றனர்.